துளி கூட இஷ்டம் இல்லாமல் நடிச்ச ரஜினி! மொத்த படமும் டிராப்.. அப்புறம் எப்படி ஹிட்டாச்சுனு தெரியுமா?

rajini (2)
என்னதான் இன்று ஒரு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அதற்கு தீனி போட்ட படங்களாக இருந்தது 80, 90களில் வெளியான படங்கள்தான் ஒரு முக்கிய காரணமாக அமைந்தன. அவருடைய ஸ்டைலாகட்டும், நடிப்பாகட்டும் அத்தனைக்கும் ஒரு அடிவாரமாக இருந்தது அந்த காலகட்டத்தில் வெளியான படங்கள்தான். அதில் இருந்துதான் ரஜினியை இன்றுவரை மக்கள் தங்கள் நெஞ்சங்களில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
ரஜினியின் நடிப்பில் வேட்டையன் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கூலி திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இன்று ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார்.
கமலை வைத்து விக்ரம் என்ற ஒரு மாபெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படத்தை கொடுத்ததன் மூலம் ரஜினிக்கும் எந்தமாதிரியான படத்தை கொடுக்க போகிறார் என்ற ஒரு ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் ரஜினியின் தர்மதுரை படம் உருவான கதை பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது தர்மதுரை படம் முதலில் காலம் மாறிப் போச்சு என்ற பெயரில் உருவானதாம். ஒரு 10 நாள்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க ரஜினிக்கு துளி கூட இஷ்டம் இல்லையாம். இதை படக்குழுவினரிடம் ரஜினி சொல்லிக் கொண்டே இருந்தாராம். படத்தின் கதை எங்கேயோ போய்க் கொண்டிருப்பது போல தெரிகிறது என கூறினாராம்.
அவர் சொன்னதை போல சரியாக 13 வது நாளில் படம் டிராப் ஆனதாம். இருந்தாலும் ரஜினியின் கால்ஷீட் வீணாய் போகக் கூடாது எனக் கருதி படத்தின் இயக்குனர் ராஜசேகர் ஒரு புதிய கதையை உருவாக்கி எடுத்ததுதான் தர்மதுரை. அந்தப் படம் எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும்.