இந்த கதை சரியா?!. இயக்குனரிடம் மல்லுக்கட்டிய ரஜினி!.. ஆனா கிடைச்சது சிறந்த நடிகர் விருது!..

by சிவா |   ( Updated:2023-12-14 14:23:04  )
rajini
X

பொதுவாக சில நடிகர்கள் இயக்குனரை நம்பி நடிப்பார்கள். இல்லையேல் கதையை நம்பி நடிப்பார்கள். அதுவும் கொஞ்சம் வளர்ந்த பின்னர்தான். அறிமுகமாகும்போது கிடைக்கும் எல்லா வேடங்களிலும் நடிப்பார்கள். ஏனெனில் அப்போது வேறு வழியில்லை. அதுவே கொஞ்சம் வளர்த்துவிட்டால் பல கதைகளை நிராகரித்து அவர்களுக்கு பிடிக்கும் கதைகளில் நடிப்பார்கள்.

சினிமாவில் கதை அமைவது என்பது சுலபமல்ல. சில சமயம் ஒரு கதையை கேட்டு நடிக்க துவங்கிய பின் இந்த கதை சரியாக வருமா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்கிற சந்தேகம் ஹீரோவுக்கே வந்துவிட்டும். எனவே, இயக்குனரிடம் இதுபற்றி விவாதிப்பார்கள். இயக்குனர் சொல்வது அவரை திருப்தி படுத்தினால் அந்த கதையில் தொடர்ந்து நடிப்பார்கள். இல்லையெனில், படத்திலிருந்தே விலகிவிடுவார்கள்.

இதையும் படிங்க: மசாலா ஹீரோன்னு யார் சொன்னா!?.. எந்த ஹீரோவும் செய்யாததை அப்போதே செய்த ரஜினி..

பஞ்சு அருணாச்சலம் கதை, திரைக்கதை எழுது எஸ்.பி.முத்துராமன் நடித்து ரஜினி கதாநாயகனாக நடித்து 1979ம் வருடம் வெளிவந்த திரைப்படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை’. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக படாபட் ஜெயலட்சுமி, சோ, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன் என பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் தம்பி, தங்கைக்காக ரஜினி எல்லாவற்றையும் தியாகம் செய்வார். மிகவும் கஷ்டப்பட்டு அவர்கள் கேட்பதை செய்து கொடுப்பார். ஆனால், அவர்களுக்கு ரஜினி மீது பாசமே இருக்காது. சுயநலமாக நடந்துகொள்வார்கள். இதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து சில நாட்களில் அந்த கதை மீது ரஜினிகே சந்தேகம் வந்தது.

இதையும் படிங்க: வீடு வாங்கியும் நிறைவேறாம போன ஆசை!.. ரஜினிக்குள்ள இன்னும் அந்த சோகம் இருக்காம்!…

அப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் ‘தம்பி, தங்கைக்காக எல்லாவற்றையும் செய்கிறான். ஆனால், அவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள். இப்படி உண்மையில் நடக்குமா?.. நிஜவாழ்வில் இப்படி யாரும் இருக்கமாட்டார்களே!’ என கேட்க. முத்துராமன் சொன்ன பதில் அவருக்கு திருப்தியை கொடுக்கவில்லை.

rajini

எனவே, அப்படத்தின் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்தார் எஸ்.பி.முத்துராமன். ரஜினியின் சிந்தனையை புரிந்து கொண்ட பஞ்சு அருணாச்சலம் ‘ரஜினி.. ஒரு 5 ஆயிரம் அடி படத்தை எடுத்து போட்டு பார்ப்போம். பிடிக்கவில்லை என்றால் இதை அப்படியே விட்டுவிட்டு வேறு கதையை எடுப்போம்’ என சொல்ல ரஜினிக்கும் அது சரி எனப்பட்டது.

அதேபோல், எடுத்த காட்சிகளை போட்டு பார்க்க ‘இந்த படம் தனது திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும்’ என ரஜினி நம்பினார். அவரின் நம்பிக்கை கொஞ்சமும் வீண் போகவில்லை. இந்த படத்திற்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது ரஜினிக்கு கிடைத்தது. அதேபோல், ரஜினியின் நடிப்பில் வெளியான மிகச்சிறந்த படங்களின் வரிசையில் ஆறிலிருந்து அறுபதுவரை இப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்கு கெட்டவன் – ரஜினி வில்லனாக கலக்கிய திரைப்படங்கள்..

Next Story