Connect with us
rajini kanth

Cinema History

மசாலா ஹீரோன்னு யார் சொன்னா!?.. எந்த ஹீரோவும் செய்யாததை அப்போதே செய்த ரஜினி..

Actor rajini: சினிமாவில் கதை என்பதை பல வகைகளாக பிரிக்கலாம். அதேபோல், கமர்ஷியல் திரைப்படம் என்றால் வெற்றிக்கு தேவையான காதல், காமெடி, ஆக்‌ஷன், குடும்ப செண்டிமெண்ட் என எல்லாவற்றையும் கலந்து எடுப்பார்கள். எம்.ஜி.ஆர் காலம் முதல் இப்போது வரை இதுதுதான் வெற்றிப்படங்களின் ஃபார்முலா.

சில படங்களில் காதலுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சில படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பார்கள். இது ஒருபுறம் எனில், நாவல்களை சினிமாவாக எடுப்பது என்பது தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகமிக குறைவு. ஹாலிவுட்டில் உருவாகும் 90 சதவீத திரைப்படங்கள் ஏற்கனவே ஒரு எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படியாக கொண்டதுதான்.

இதையும் படிங்க: சென்சார் பிரச்சனையால் தலைப்பு மாற்றப்பட்ட ரஜினி படம்!. அட இது தெரியாம போச்சே!..

ஆனால், தமிழில் அப்படி இல்லை. நாவல்களில் நல்ல கதை இருக்கும். ஆனால், அதை கமர்ஷியல் சினிமாவாக எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் நல்ல படம் என்றே பெயர் கிடைக்குமே தவிர தயாரிப்பாளருக்கு லாபம் வராது. அதோடு, நஷ்டத்தில் முடியவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், சினிமா என்பது பலருக்கும் இங்கு வியாபாரம் மட்டுமே. இதில், ரசிகனின் ரசனையும் மாற வேண்டும். அப்போதுதான் நல்ல சினிமாக்கள் உருவாகும்.

ஆனாலும், அவ்வப்போது நாவல்களை அடிப்பையாக வைத்து திரைப்படங்கள் உருவாகித்தான் வருகிறது. வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, விடுதலை ஆகிய படங்கள் ஏற்கனவே எழுதப்பட்ட நாவல்தான். அதேபோல், இயக்குனர் பாலா நாவல்களை சினிமாவாக எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: மகளுக்காக மீண்டும் ரெடியாகும் ரஜினி!.. குட்டிக்கதை ரெடியா சார்?!.. கேப்பு விடாம அடிச்சா எப்படி!..

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் மசாலா படங்களில் நடிக்கும் ஹீரோக்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், இதில் ரஜினி அவர் வளர்ந்து வந்த காலத்தில் நாவல்களை வைத்து உருவான படங்களில் நடித்திருக்கிறார். புவனா ஒரு கேள்விக்குறி, காயத்ரி, வணக்கத்துக்குரிய காதலியே, பிரியா, முள்ளும் மலரும் ஆகிய படங்கள் நாவல்களை அடிப்பையாக கொண்டு உருவானவைதான். இது எல்லாவற்றிலும் ரஜினிதான் ஹீரோ.

ஆனால், அதே ரஜினி 80களுக்கு பின் வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலா கதைகளில் நடிக்க துவங்கினார். இப்போது வரை அது அது தொடர்கிறது. அதேநேரம், கபாலி, காலா, சந்திரமுகி போன்ற வித்தியாசமான கதைகளிலும் ரஜினி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினி, கமல், அமிதாப் இணைந்து நடித்த ஒரே படம்!.. அட அது அந்த படத்தோட ரீமேக்!…

google news
Continue Reading

More in Cinema History

To Top