அப்பாவுக்கு சீரியஸ்!.. விடிய விடிய கார் ஓட்டிய விஜயகாந்த்!. நடிகர் பகிர்ந்த தகவல்!..

மதுரையில் வசதியான வீட்டில் பிறந்தாலும் தனக்னெ ஒரு ரைஸ் மில் தொழில் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர்தான் விஜயகாந்த். துவக்கத்தில் பல கஷ்டங்களையும், அவமானங்களையும் இவர் சந்தித்து இருக்கிறார்.

ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து போராடி சினிமாவில் நுழைந்தார். ஒருவழியாக சினிமாவில் நுழைந்தாலும் நடிக்கும் படங்கள் ஓடவில்லை. அதோடு, அவர் சினிமாவில் நடிப்பதை தடுக்க பலரும் வேலை செய்தார்கள். நடிகைகளிடம் விஜயகாந்த் பற்றி தவறாக சொல்லி வைத்தார்கள். இதனால் சில நடிகைகள் விஜயகாந்துடன் நடிக்க தயங்கினார்கள்.

இதையும் படிங்க: சிவாஜி – விஜயகாந்த் இணைந்து நடிக்கவிருந்த படம்.. ஆனா நடிச்சது அந்த ஹீரோ!.. ஜஸ்ட் மிஸ்!…

எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்தார் விஜயகாந்த். அந்த படம் ஹிட் அடிக்கவே அவரின் மார்க்கெட் ஏறியது. ஆனால், அதன்பின் தொடர் தோல்விப்படங்களை கொடுத்தார். பின்னார் அதே எஸ்.ஏ.சி. இயக்கத்தில் நடித்த சாட்சி திரைப்படம் கை கொடுத்தது.

vijayakanth

அதன்பின் மெல்ல மெல்ல முன்னேறி சினிமாவில் தனக்கென இரு இடத்தை பிடித்து ரசிகர் கூட்டங்களையும் சேர்த்தார். விஜயகாந்த் படங்கள் என்றாலே சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்று நம்பியே ரசிகர்கள் படம் பார்க்க போனார்கள். விஜயகாந்த் தனது குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர்.

இதையும் படிங்க: உங்களை திட்டுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!.. கேப்டன் விஜயகாந்த் சொன்ன கூல் பதில்!…

குடும்பத்தினருக்கு ஒன்றென்றால் பதறிவிடுவார். விஜயகாந்தின் நண்பரும் நடிகருமான வாகை சந்திரசேகர் பேட்டி ஒன்றில் பேசியபோது ‘விஜயகாந்தின் அப்பாவுக்கு உடல்நிலை சீரியஸ் என செய்தி வந்தது. அப்போது விஜயகாந்த், நான் இருவரும் படப்பிடிப்பில் இருந்தோம். நான் போகிறேன் நீயும் என்னுடன் வா என கூப்பிட்டார். இரவு கிளம்பினோம்.

விஜயகாந்தே காரை ஓட்டினார். அவரின் அப்பாவை பார்த்துவிட்டு சுமார் அரை மணி நேரம் அங்கிருந்துவிட்டு உடனே சென்னை திரும்பினோம். விஜயகாந்த் விடிய விடிய கார் ஓட்டினார். சென்னை வந்தபின் உடனே நாங்கள் இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டோம்’ என சொல்லி இருந்தார்.

 

Related Articles

Next Story