யாருப்பா அந்த பையன்? கமல் படத்தில் நடித்த நடிகரை பார்த்து மிரண்ட ரஜினி

rajini
Actor Rajini: தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு போட்டி நடிகராக கமல் இருந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான நட்பு இருப்பதை நம்மால் உணர முடிகிறது. அதை பல வழிகளில் இருவரும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கமல் படத்தை ரஜினி பார்த்து விமர்சனம் சொல்வதும் ரஜினி படத்தை கமல் பார்த்து விமர்சனம் சொல்வதும் என வழக்கமாக கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ரஜினிக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கமலை தொடர்பு கொண்டு அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வார் ரஜினி.
இதையும் படிங்க: நீங்க வேணாம்..! முத்தழகு தான் வேணும்.. ஸ்ரேயா கோஷலை இகோவை கிளறிய அமீர்.. ஆனா ஜெயிச்சது அவர் தானாம்..!
இதை பொன்னியின் செல்வன் விழா மேடையிலேயே நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அந்த வகையில் கமல் நடிக்க தயங்கிய படம் வேட்டையாடு விளையாடு திரைப்படம். இந்தப் படத்தின் மேக்கிங்கில் ஆரம்பத்தில் கமலுக்கு கொஞ்சம் குழப்பம் இருந்ததாகவே தெரிகிறது.
அதன் பிறகு போக போக கௌதம் மேனனின் முயற்சியில் நம்பிக்கை வரவே தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்தார் கமல். அதற்கேற்ப படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே ரஜினி படத்தை பார்த்தாராம்.
இதையும் படிங்க: பிக்பாஸ் தான் இப்ப முக்கியமா? அத விட இத பண்ணியிருக்கலாம் – ஆண்டவர் பொழப்புல மண்ணள்ளிப் போட்டுருவாங்க போல
படத்தை பார்த்து முடித்ததும் அந்த பையன் யாரு? என வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜியை சுட்டிக் காட்டி ரஜினி கேட்டாராம். அதன் பிறகு படம் முடிந்ததும் டேனியல் பாலாஜியை தனியாக அழைத்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ரஜினி பேசினாராம்.
பேசிவிட்டு ரஜினி செல்கையில் ஐய்யோ போயிட்டு வரேன்னு சொல்லலையேனு டேனியல் பாலாஜி நினைக்க சென்றவர் திரும்பி வந்து டேனியல் பாலாஜிக்கு ஸ்பெஷலாக பாய் சொல்லிவிட்டு சென்றாராம் ரஜினி. இதில் ரஜினியின் பெருந்தன்மைதான் தெரிந்தது. உடனே இதை பார்த்ததும் டேனியல் பாலாஜிக்கு ஒரே அதிர்ச்சியாம்.
இதையும் படிங்க: நிறைவேறாமலே போன எம்.ஜி.ஆரின் கடைசி ஆசை!… இப்படி ஆகிப்போச்சே!..