Connect with us
kamal

Biggboss Tamil 7

பிக்பாஸ் தான் இப்ப முக்கியமா? அத விட இத பண்ணியிருக்கலாம் – ஆண்டவர் பொழப்புல மண்ணள்ளிப் போட்டுருவாங்க போல

Actress Radhika: தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை ராதிகா. இப்போது சீரியல்களை தயாரிக்கும் பணியிலும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதையும் தொடர்ந்து கொண்டு வருகிறார். இவர் நேற்று ஒரு மருத்துவ விழிப்புணர்வு விழாவிற்கு சென்றிருந்தார்.

அங்கு டையாபட்டிஸ் பற்றி ராதிகா பேசியிருந்தார். அப்போது நம் உடம்பை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை விட்டு தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை செலவிடக் கூடாது என்பது போல கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நிறைவேறாமலே போன எம்.ஜி.ஆரின் கடைசி ஆசை!… இப்படி ஆகிப்போச்சே!..

அப்போது உதாரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி எடுத்துரைத்தார் ராதிகா. அதாவது விமான நிலையத்தில் அவர் போர்டிங்கிற்காக நின்று கொண்டிருந்தாராம். அவருக்கு முன்னாடி ஒரு இளம் பெண்  நின்று கொண்டிருக்க அவரை ராதிகா கொஞ்சம் தள்ள நில்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அந்த  பெண் தன் மொபைல் போனையே பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்படி என்னதான் பார்க்கிறார் என்று பார்த்தால் போனிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாராம் அந்த பெண். இதை பார்த்ததும் ராதிகாவுக்கு டென்ஷன் ஆகிவிட்டதாம்.

இதையும் படிங்க: டாப் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? ஆனா இவங்க ரோல் மட்டும் இல்ல.. ஜெயம் ராஜா சொன்ன குட் நியூஸ்..!

உடனே அந்த பெண்ணிடம் ராதிகா  ‘பிக்பாஸ்தானே பார்க்கிற. அடுத்து என்ன நடக்கும்னு நான் சொல்றேன். இரண்டு பேர் சண்டை போட்டுவாங்க. வாய்க்கு வந்தப் படி பேசுவாங்க. அத நான் பேசுறேன். வா’ என்று சொல்லி அதன் பிறகே விமான நிலையத்திற்குள் சென்றாராம்.

இதை குறிப்பிட்டு பேசிய ராதிகா இப்படித்தான் நம் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அது ஒரு பொழுதுபோக்குதான், அதை எப்ப வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் முதலில் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: அம்மா சொல்றது தான் உண்மை.. சாட்சி சொன்ன செழியனை குழப்பிய ஈஸ்வரி… பொய் சொல்லும் கோபி..!

அதுமட்டுமில்லாமல் முதலில் ஊர் ஊராக பிரச்சாரம் செய்ய போவோம். அதற்கு பதிலாக மருத்துவத்தை பற்றியும் உடல் ஆரோக்கியத்தை பற்றியும் பிரச்சாரம் செய்திருந்தால் ஒரு புண்ணியமாக இருந்திருக்கும் என்றும் ராதிகா கூறினார்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top