ரஜினி எனக்கு மகான்! மூத்த நடிகையை கதற வைத்த சூப்பர் ஸ்டார்.. என்ன விஷயம் தெரியுமா?
Rajini: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் கலைஞராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். 70களில் ஆரம்பித்த தனது சினிமா பயணத்தை இன்றுவரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.
அடுத்த வருடம் தன்னுடைய ஐம்பதாவது பொன்விழா ஆண்டை நெருங்குகிறார் ரஜினிகாந்த். இவருடைய சாதனைகள் வெற்றிகள் என அனைத்துமே அந்த பொன்விழா ஆண்டில் வெளிப்படும் என தெரிகிறது. அவருடைய பொன்விழா ஆண்டை ஒட்டுமொத்த திரையுலகமும் கொண்டாட தயாராக இருக்கின்றது.
இதையும் படிங்க: ஆரம்பமே ஆப்பா?!.. கோட் ஸ்பெஷல் ஷோவை கேன்சல் செய்த தியேட்டர் ஓனர்ஸ்!..
இன்னொரு பக்கம் மலையாள சினிமாவில் பூகம்பமாக வெடித்திருக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்தும் ரஜினியை மறைமுகமாக சிலர் சாடி வருகின்றனர். அங்கு ஹேமா கமிஷன் என்ற ஒரு அமைப்பு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதையொட்டி ரஜினியிடம் கேட்டபோது ஹேமா கமிஷனை பற்றியே தெரியாது என கூறியதுதான் இப்பொழுது பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
தமிழ் திரை உலகில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருபவர். எல்லா விஷயங்களையும் நன்கு தெரிந்தவர். இவருக்கு ஹேமா கமிஷன் பற்றி தெரியாது என்றால் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பலரும் கூறி வருகிறார்கள். அதே சமயம் கங்குவா திரைப்படம் வேட்டையன் திரைப்படத்தோடு மோதாது என சூர்யா கூறியதை மட்டும் ஞாபகத்தில் வைத்திருக்க முடிகிறதா என்றும் ரஜினிக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி படக்குழு ரகசியம் இதானா? ஆனா நீங்களாம் கொஞ்சம் வெவரம்தான்…
இந்த நிலையில் ரஜினியை பற்றி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இந்த தகவலை பகிர்ந்திருக்கிறார். ரஜினிக்கு அம்மாவாக பண்டரி பாய் நடித்திருப்பார். அதில் அவரால் நடக்க முடியாது. அவரை தூக்கி கொண்டு சேவைகள் செய்வது குளிப்பாட்டுவது என ஒரு பாடலில் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார் ரஜினிகாந்த்.
அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் உண்மையிலேயே பண்டரி பாய்க்கு விபத்து ஏற்பட்டு அவருடைய கை செயலிழந்து போய்விட்டதாம். அப்போது அவருக்கு தேவையான உதவிகளை எல்லாம் செய்தவர் ரஜினி தானாம். மருத்துவமனையில் இருந்து சகலமும் பல உதவிகளை செய்து இருக்கிறார் ரஜினி. இதை அறிந்த பண்டரி பாய் ரஜினி எனக்கு மகன் இல்லை மகான் என கதறி அழுதாராம்.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி படக்குழு ரகசியம் இதானா? ஆனா நீங்களாம் கொஞ்சம் வெவரம்தான்…