ஹீரோயினை கட்டிப்பிடிக்க தயங்கிய ரஜினி! மீனாவுக்கு ஒரு நியாயம்.. இந்த நடிகைக்கு ஒரு நியாயமா?
Rajini: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 49 வது ஆண்டினை அடி எடுத்து வைக்கும் ரஜினிகாந்த் அடுத்த வருடம் தன்னுடைய ஐம்பதாவது பொன்விழா ஆண்டை கொண்டாட இருக்கிறார். அதுவும் ரஜினிக்காக அவருடைய பொன்விழா ஆண்டை திரை பிரபலங்கள் சேர்ந்து கொண்டாட போவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.
இவ்வளவு வருட சினிமா வாழ்க்கையில் அவர் பட்ட போராட்டங்கள் கஷ்டங்கள் முயற்சிகள் சாதனைகள் என அனைத்தையும் ஒருங்கிணைந்து ஒரு தொகுப்பாக வெளியிடவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. 70களின் இறுதியில் தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்த ரஜினிகாந்த் இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் மீனா-முத்து சண்டை.. பாண்டியனின் காமெடி… வீட்டுக்கு வருவாரா எழில்? அடுத்த வாரம் இதான்!..
இந்த பட்டம் வேறு யாருக்கும் பொருந்தாத வகையில் இத்தனை ஆண்டு காலம் அதைக் கட்டி காத்து வருகிறார். இந்த நிலையில் ஒரு ஹீரோயினை கட்டி பிடிக்கும் காட்சியில் நடிக்க ரஜினிகாந்த் தயங்கியதாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சுமித்ரா.
ரஜினி சினிமாவில் நுழைவதற்கு முன்பே சுமித்ரா ஒரு டாப் நடிகையாக அதுவும் பிரபலமான நடிகையாகவே இருந்தார். அந்த படத்திற்குப் பிறகு பணக்காரன் திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருப்பார் சுமித்ரா. பணக்காரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இவர்தான் தன்னுடைய அம்மா என அறிந்து ரஜினிகாந்த் சுமித்ராவை போய் பாசத்துடன் கட்டி பிடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: இது நம்ம பில்டிங் இல்லயா?!. 10 வயதில் மகன் கேட்ட கேள்வி!.. ஆடிப்போன விஜயகாந்த்…
இதை இயக்குனர் சொன்னதும் ரஜினி ஓடி போய் நிற்பாராம். திரும்பி வந்து விடுவாராம். இப்படியே பல டேக்குகள் எடுத்துக் கொண்டாராம் ரஜினிகாந்த். ஒரு கட்டத்திற்கு மேலாக இந்த காட்சியில் என்னால் நடிக்க முடியாது. எனக்கு ஒரு காலத்தில் ஹீரோயின் ஆக நடித்தவர் இப்பொழுது அம்மாவாக நடிக்கும் பட்சத்தில் அந்த ஒரு பாசத்தில் என்னால் கட்டிப்பிடிக்க முடியவில்லை எனக் கூறினாராம்.
அதன் பிறகு அந்த படத்தின் இயக்குனர் வேண்டுமென்றால் ஆங்கிளை மாற்றி வைத்துக் கொள்கிறேன். உங்களுடைய முகத்தை ஒரு பக்கமாக மட்டும் காட்டுங்கள். நான் காட்சிகளை எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறிய பிறகு தான் அந்த காட்சி படமாக்கப்பட்டதாம். இதே போல் தனக்கு மகளாக நடித்த மீனாவையே தனக்கு ஹீரோயினாக மாற்றியவர் ரஜினிகாந்த். அப்படி இருக்கும்போது ஹீரோயினாக நடித்தவரை அம்மாவாக அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதையும் படிங்க: தமிழ் டிரெய்லரில் இருந்ததை இந்தியில் மாற்றியதுக்கு காரணம் இதான்… கோட்டில் இதை கவனிச்சீங்களா?