Cinema History
தோளில் காக்கிப்பை!.. 28 ரூபாயில் சிறிய வாடகை ரூம்!.. சினிமாவுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டாரா ரஜினி?…
Actor Rajini: கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக வேலை செய்து வந்த ரஜினிக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட பெரிய நடிகராகலாம் என்கிற ஆசையில் 1970ம் வருடம் சென்னை வந்தார். இங்கே யாரையும் தெரியவில்லை. திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற நினைத்த ரஜினி அதிலும் சேர்ந்தார்.
பொதுவாக பேருந்து நடத்துனர் தங்களின் யூனிபார்முக்காக துணி எடுக்கும்போது அதில் துணி அதிகமாக இருந்தால் அதிலேயே தோள் பை செய்து வைத்து கொள்வார்கள். ரஜினியும் அப்படிப்பட்ட ஒரு காக்கிப்பையில்தான் தனது துணிகளை எடுத்து வந்தார். நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர அவர் வரிசையில் நின்றபோது அவரை எல்லோரும் சிரித்தார்களாம்.
இதையும் படிங்க: ரஜினியை ஏமாற்றிய சினிமா உலகம்!.. புரியவைத்து தூக்கிவிட்ட கமல்.. இவ்வளவு நடந்திருக்கா?!…
கல்லூரியில் வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால், தங்க இடம் வேண்டுமே!.. எங்கு போவது?.. யாரை உதவி கேட்பது?.. ரஜினிக்கு யாரையும் தெரியவில்லை. வாடகைக்கு ஒரு அறை எடுக்கலாம் என நினைத்து நடந்தே அறையை தேடினார். வால்டாக்ஸ் சாலையில் உணவோடு மாத வாடகை ரூ.32 விளம்பரம் பார்த்து அங்கு சென்றார்.
மேலே இரு அறை இருந்தது. ஆனால், நேர் கீழே சமையலறை. புகை அப்படியே அந்த அறைக்குள் வரும். எனவே, ஒரு துணியை வைத்து ஜன்னலை மறைத்துக்கொண்டு அங்கு தங்கினார். அதனால் வாடகையில் 4 ரூபாய் குறைத்து அவருக்கு 28 ரூபாய் வாங்கினார்கள்.
இதையும் படிங்க: ரஜினியின் கெரியரில் மைல்கல்லாக இருந்த அந்த ஒரு வருஷம்! இதுவரை எந்த நடிகரும் செய்யாத சாதனை
வெப்பம் காரணமாக பகலில் அந்த அறையில் இருக்கவே முடியாது. எனவே, பகல் முழுவதும் வெளியே சுற்றிவிட்டு இரவு மட்டும் அங்கு சென்று படுப்பாராம் ரஜினி. அங்கு தங்கிதான் நடிப்பு கல்லூரியில் படித்து முடித்தார். அதன்பின் சினிமாவில் வாய்ப்பு தேடியபோதும் அங்குதான் தங்கியிருந்தார்.
பாலச்சந்தர் மூலம் அபூர்வ ராகங்கள் நடித்து பின் பல படங்களில் நடித்த பின்னரே ரஜினி அந்த அறையை காலி செய்தார். சினிமாவில் நல்ல சம்பளம் வரவே ஒரு கட்டத்தில் போயஸ்கார்டனில் வீடு கட்டி செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ரஜினியே ஊடகம் ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எப்பா கடவுளே இது ஒன்னு மட்டும் போதும்! ஆண்டவனிடம் ரஜினிக்கு இருக்கிற ஒரே வேண்டுதல் இதுதானாம்