அத மட்டும் செஞ்சால் என்னை வாழவைத்தவர்களுக்கு செய்யும் பாவம்! எதை பற்றி கூறினார் தெரியுமா ரஜினி?

by Rohini |
rajini
X

rajini

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் மக்களால் அதிகளவு விரும்பப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரே நினைத்திராத அளவு இன்று தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். 80களில் ஆரம்பித்த தனது கெரியரை இன்றுவரை வெற்றிகரமாக கொண்டு செலுத்தி வருகிறார்.

வில்லனாக நடித்து அதன் பின் இன்று ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்ற பெருமையையும் பெற்று விளங்குகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜெயிலர். படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிங்க: பைக்கையே தொடக் கூடாதுனு சொன்னவர் ஷாலினி! இப்போது அஜித்தை அவர் விருப்பப்படி விட என்னக் காரணம் தெரியுமா?

இந்த வயதிலேயும் இளம் தலைமுறை நடிகர்கர்களுடன் டஃப் கொடுக்கும் வகையில் மாஸ் காட்டி வருகிறார் ரஜினி. தற்போது த.ச. ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக லோகேஷுடன் இணைய இருக்கிறார்.

ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் மீது இப்போது இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் கண்டிப்பாக லோகேஷின் ஃபார்முலாவான LCU இந்தப் படத்தில் இருக்காது என்பது மட்டும் உறுதி.

இதையும் படிங்க: விஜயகாந்த் என்னை பார்க்க வராதேனு சொல்லிட்டாரு! கேப்டன் சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

ரஜினியின் படமாகவே முழுக்க முழுக்க அமைய இருக்கிறது. இந்த நிலையில் அஜித், சூர்யா, சிம்பு என பல முக்கிய நடிகர்கள் விளம்பர படங்களில் நடித்திருக்கின்றனர். இப்போது வரை ஒரு சில முன்னனி நடிகர்கள் கூட விளம்பர படங்களில் நடித்து வருகின்றனர்.

ஆனால் ரஜினி மட்டும் நடிக்கவே இல்லை. நடிக்கவும் மாட்டேன் என 1991 ஆம் ஆண்டிலேயே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஏனெனில் நான் நடிக்கும் விளம்பரத்தை பார்த்து ஒரு வேளை மக்கள் ஏமாற்றப்பட்டால் என்னை வாழவைத்தவர்களுக்கு நான் செய்யும் பாவம். அதனால் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இந்த புள்ளபூச்சிய சீக்கிரம் மாட்டி விடுங்கடா கடுப்பாகுது… மனோஜால் காண்டாகும் ரசிகர்கள்..!

Next Story