அவருக்கு முன்னாடி நான் போயிடனும்... உருக்கமாக சொன்ன ரஜினிகாந்த்.. யாரிடம் தெரியுமா?
Rajinikanth: தமிழ்சினிமாவில் உச்சத்தில் நடித்துக்கொண்டு இருந்த ரஜினிகாந்த் ரொம்பவே கலகலப்பாக இருப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட ரொம்பவே உடைந்து போனவரை தேற்றியது ரெஜினா வின்சென்ட் தான். அவருக்கும் ரஜினிக்குமான உறவில் இருந்த சுவாரஸ்ய தகவல்கள்.
தர்மத்தின் தலைவன் ஷூட்டிங் நடந்த வீட்டின் உரிமையாளர் தான் ரெஜினா. அவரை முதல்முறை பார்த்த போதே ரஜினிக்கும் அவருக்கும் இணைப்பிரியாத உறவு உருவானது. அதில் இருந்து அவரை அம்மா என்று அழைப்பதையே ரஜினி விரும்புவார். அவர் குடும்பத்தினருடன் ரஜினி நட்பாக இருந்து வந்தாராம்.
அப்படி ஒருமுறை, ரஜினிக்கு திடீரென மன உளைச்சல் ஏற்பட ரெஜினா தான் உடன் இருந்து பாதுகாத்து வந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் வெற்றிக்கு பின்னாடி அஜித் கண்டிப்பா இருப்பார்! ஓ கதை இப்படி போகுதா? இயக்குனர் சொன்ன சீக்ரெட்
ரஜினி சிரித்தால் வீடே அலறுமாம். சில சமயம் அருகில் இருக்கும் வீடுகளில்கூட கேட்கும். ரெஜினா கணவர் ஏதாவது ஜோக் சொல்லி விட்டால் ரஜினி அடக்க முடியாமல் சிரித்து விடுவாராம். ஆனால் அந்த சிரிப்பையே ரஜினி கொஞ்ச காலம் தொலைத்து இருந்தாராம். அவருக்கு என்ன ஆனது எனத் தெரிந்துக்கொள்ள ஒரு ஜோசியரை அழைத்து வந்தாராம் ரெஜினா.
அவரிடம் ரஜினி ஓடிப்போய், அம்மா எத்தனை வருடம் இருப்பாங்க? எனக் கேட்டாராம். ரொம்ப நாள் நல்லா இருப்பாங்க என ஜோசியர் சொல்ல, உடனே ரஜினி, அது போதும் எனக்கு. எனக்கு சாவு அம்மாவுக்கு முன்னாடியே இருக்கணும் என்றாராம். இதனை கேட்ட அங்கிருந்தவர்களின் கண்ணே கலங்கிவிட்டதாம்.
ஒருமுறை ரெஜினா வீட்டில் தமிழ் படம் ஒன்றின் சூட்டிங் நடந்து கொண்டு இருந்ததாம்.
இதையும் படிங்க: லவ்வர் படத்துக்கு கூட அது நடந்துடுச்சு!.. ரஜினியோட லால் சலாம் படத்துக்கு இன்னும் நடக்கலையே!..
அதில் ரஜினியுடன் நிறைய படங்களில் நாயகியாக நடித்த நடிகை நடித்துக் கொண்டு இருந்தாராம். ரஜினி அங்கு வந்து ரெஜினா அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்தாராம். அந்த நடிகை தன்னிடம் பேசுவார் என ரஜினி நினைக்க ஆனால் அந்த நடிகை ரஜினியை கண்டுக்கவே இல்லையாம்.
கோலிவுட்டே மனம் சரியில்லாத ரஜினியை ஒதுக்கியது போல அந்த நடிகையும் ஒதுக்கியது போல முகம் கொடுத்து பேசாமல் சென்றாராம். ஆனால் அடுத்த நாளே தன்னுடைய மகளை அனுப்ப கார் வராமல் ரெஜினா அம்மா காத்திருந்தாராம்.
இதையும் படிங்க: ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளரை மொட்டை அடிக்க வைத்த விக்ரம் படம்!… அடப்பாவமே…
அந்த சமயத்தில் ரஜினி அங்கு வர அவரே தன் மகளை அழைத்து செல்லட்டும் என்றாராம். முன் சீட்டில் மாறி உட்கார போன ரஜினியை நிறுத்தி நீயும் பின் சீட்டில் உட்கார்ந்தே போ என மகளும் அனுப்பிவிட்டாராம். தன்னை மகனாக ஏற்றுக்கொண்ட ரெஜினாவை பின்னர் வந்து கட்டிக்கொண்டு அழுதாராம் ரஜினி. அப்படி இருந்தது இருவருக்குமான உறவு என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.