
Flashback
முதல் படத்திலேயே செண்டிமெண்ட் பார்த்த ரஜினி!.. அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சம்பவம்!..
Rajinikanth: சினிமா என்பது ஒரு செண்டிமெண்ட் உலகம் என சொல்வார்கள். ஏதோ ஓரு நாளில் ஒன்று சரியாக அமைந்துவிட்டால் அதையே தொடர்ந்து செய்ய நினைப்பார்கள். அதாவது, அந்த குறிப்பிட்ட நாளிலேயே முக்கியமான நிகழ்வுகள் நடக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். படத்தின் ஷூட்டிங்கை வெள்ளிக்கிழமைதான் துவங்குவார்கள். முதல் காட்சியை கோவில் அருகே நின்று ஹீரோ பேசுவது போல படம் பிடிப்பார்கள்.
அதேபோல், ஒரு கதாபாத்திரம் இறந்துவிட்டது போல காட்சி எடுத்தால் உடனே அவர் சிரிப்பது போல ஒரு காட்சியை எடுப்பார்கள். சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு சில குறிப்பிட்ட நாட்களில் செண்டிமெண்ட் இருக்கும். நடிகர் அஜித்துக்கு வியாழக்கிழமை செண்டிமெண்ட் உண்டு. அதற்கு காரணம் அவர் ஒரு பாபா பக்தர். எனவே, பாபாவுக்கு உகந்த வியாழக்கிழமை தனது படங்கள் தியேட்டரில் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்.
சினிமாவில் சகலகலா வல்லவன் என பெயரெடுத்த டி.ராஜேந்திருக்கு 9ம் நம்பர் மீது செண்டிமெண்ட் இருந்தது. உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, எங்க வீட்டு வேலன், ஒரு தாயின் சபதம் என அவரின் படங்களின் தலைப்பு எல்லாமே 9 எண்களில் மட்டுமே இருக்கும். இப்படி பலருக்கும் பல செண்டிமெண்ட் இருக்கிறது.
அப்படி நடிகர் ரஜினிக்கும் 6ம் நம்பர் மற்றும் வியாழக்கிழமை செண்டிமெண்ட் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அதை எப்போதும் அவர் மறுத்ததும் இல்லை. எனக்கு செண்டிமெண்ட்டெல்லாம் இல்லை என பொய்யாக நடித்து யாருக்கும் தெரியாமல் அவர் செண்டிமெண்ட் பார்த்ததும் இல்லை. சில இடங்களில் அதை ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார்.

#image_title
நடிப்பு கல்லூரியில் படித்து கொண்டிருந்த ரஜினி. அந்த கல்லூரிக்கு இயக்குனர் கே.பாலச்சந்தர் ஒருநாள் வர அப்போது அவருடன் அறிமுகம் ஆகிறது. ரஜினியை பார்த்த பாலச்சந்தருக்கு எங்கோ பொறி தட்டியது. அப்போது அவர் எடுத்து கொண்டிருந்த அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் ரஜினிக்கு கொடுக்கிறார்.
முதல் முதலாக சினிமாவில் நடிக்கிறோம். வியாழக்கிழமை நம்முடையை காட்சியை எடுத்தால் நல்லது என நினைக்கிறார் ரஜினி. ஆனால், உங்களுக்கு திங்கள் கிழமை ஷூட்டிங் என சொல்லிவிட்டார்கள். ரஜினிக்கு கொஞ்சம் அப்செட். திங்கள் கிழமை போகிறார். ஆனால், அவரின் காட்சி எடுக்கப்படவில்லை. அடுத்து செவ்வாய்க்கிழமை போகிறார். அன்றும் அவரின் காட்சி எடுக்கப்படவில்லை. மேக்கப் போட்டு போட்டு திரும்பி வருகிறார் ரஜினி.

#image_title
அடுத்து புதன் கிழமையும் அவரை வைத்து பாலச்சந்தர் காட்சியை எடுக்கவில்லை. அடுத்தநாள் வியாழக்கிழமை என்பதால் ரஜினிக்கு சந்தோஷம் என்றாலும் நாளையும் காட்சி எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது என்கிற கலக்கம் வந்தது. ஆனால், அவர் ஆசைப்பட்ட படியே அடுத்தநாள் வியாழக்கிழமை மதியம் அவரை வைத்து முதல் காட்சியை எடுத்தார் பாலச்சந்தர். ரஜினிக்கும் அது மனநிறைவை கொடுத்தது.