ஒரு வழியா பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு போலயே!.. மீட்டிங் போட்டு கன்ஃபார்ம் பண்ண இளையராஜா-ரஜினி!

ilayaraja
நடிகர் ரஜினிகாந்தும் இளையராஜாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது..
இசைஞானி இளையராஜா:
தமிழ் சினிமாவில் தற்போது வரை சுமார் 1200 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களுக்கு இலவசமாகவே பாடல்களையும் பின்னணி இசையையும் அமைத்து கொடுத்து இருக்கின்றார். பல தலைமுறைகளை தாண்டி தமிழ் சினிமாவில் தற்போது வரை பிரபல இசையமைப்பாளராக இருந்து வருகின்றார்.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கும் ஒரு லவ் ஃபெயிலர் ஸ்டோரி இருக்கு!.. அது யாருன்னு தெரியுமா?…
பாடல் காப்புரிமை:
இளையராஜாவுக்கு பின்பு வந்த தலைமுறையினர்கள் அனைவரும் தங்களது பாடல்களின் காப்புரிமை விஷயத்தில் மிகவும் சரியாக நடந்து கொண்டார்கள். ஆனால் இளையராஜா தொடக்கத்தில் அதில் கவனம் செலுத்தவில்லை. பல படங்களின் பாடல்களின் காப்புரிமை அவரிடம் இல்லாமல் இருக்கின்றது. இது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

coolie movie
சமீபத்தில் கூட மலையாளத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் என்கின்ற திரைப்படத்தில் குணா படத்தில் இடம்பெற்று இருந்த' கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடலை அதில் பயன்படுத்தியிருந்தார்கள்.
ஆனால் அதற்கு இளையராஜாவிடம் முறையாக உரிமை பெறவில்லை என்று கூறி மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருக்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளையராஜா பாடல்களை தங்களது படங்களில் பயன்படுத்துவதற்கு பலரும் யோசித்து வரும் சூழல் உருவாகி இருக்கின்றது.
நடிகர் ரஜினிகாந்தின் கூலி:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. படம் ஆரம்பித்த உடனே டைட்டிலை ஒரு டீசராக வெளியிட்டு இருந்தார்கள் படக்குழுவினர். அந்த டீசரில் இளையராஜா இசையமைத்த 'வா வா பக்கம் வா' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இதனால் இளையராஜா தரப்பில் இருந்து படக்குழுவினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தனது அனுமதி பெறாமல் கூலி படத்தில் தனது பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

rajini-ilayaraja
அதற்கு காப்புரிமை மற்றும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இது அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பிய போது இது கூலி படக்குழுவினருக்கும், இளையராஜாவுக்கும் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று பதிலளித்திருந்தார். இந்த பதில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: காவாலா பாடலில் நான் செய்தது தப்பு!. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே தமன்னா!…
புகைப்படம் வைரல்:
இந்நிலையில் தற்போது இன்று ட்விட்டர் பக்கத்தில் இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை தினசரி படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான சிந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஒரு வழியாக கூலி படத்தின் காப்புரிமை பிரச்சனை முடிந்துவிட்டது போலவே இருவரும் சந்தித்திருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.