Connect with us
rajini

Cinema News

கிரேஸி மோகனை அழவைத்த ரஜினிகாந்த்!.. அந்த படத்துல இப்படியெல்லாம் நடந்துச்சா!..

நகைச்சுவை நாடகங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கிரேஸு மோகன். இவரின் வசனங்களெல்லாம் ரசிகர்களுக்கு குபீர் சிரிப்பை வரவழக்கும் பல நூறு நாடகங்களை நடத்தி இருக்கிறார். இவரும் இவரின் சகோதரர் பாலஜி இருவரும் இணைந்து பல நாடகங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

நடிகர் கமல்ஹாசனுக்கு கிரேஸி மோகனை மிகவும் பிடிக்கும். எனவே தனது படங்களில் அவரை பயன்படுத்த நினைத்தார். இருவரும் இணைந்து முதன் முதலாக வேலை செய்தது ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில்தான். அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தில் பெரும் பங்கு வகித்தவர் கிரேஸி மோகன்.

இதையும் படிங்க: தளபதி 69 படத்தின் இயக்குநர் இவரா?.. கோட் பட தயாரிப்பாளர் யாரை சொல்லியிருக்காரு பாருங்க!..

அதன்பின் கமலுடன் மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், சதிலீவாலவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார். இந்த படத்தில் இடம் பெற்ற வசனங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

கமல் படங்கள் மட்டுமல்ல, சின்ன மாப்பிள்ளை, வியட்நாம் காலணி, மிஸ்டர் ரோமியோ, ரட்சகன், ஆஹா, கண்ணோடு காண்பதெல்லாம், பூவெல்லாம் கேட்டுப்பார், இதய திருடன், நான் ஈ போன்ற படங்களுக்கும் வசனம் எழுதி இருக்கிறார். ரஜினி தனது 100வது படமான ‘ராகவேந்திரா’ உருவாகும்போது அப்படத்தில் பணிபுரிய கிரேஸி மோகன அழைத்தார்.

இதையும் படிங்க: விஜய்யின் கோட் படம் பற்றிய கேள்வி.. கடுப்பான மோகன்.. ஹரா டீசர் விழாவில் வாக்குவாதம்!..

ஆனால், சில காரணங்களால் கிரேஸி மோகன் அப்படத்தில் பணிபுரியவில்லை. அதன்பின் பல வருடங்கள் கழித்து ரஜினி தயாரித்து நடித்த ‘அருணாச்சலம்’ படத்திற்கு கிரேஸி மோகனை அழைத்தார். அப்போதும் கூட ‘கமலிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வருகிறேன்’ என சொன்னவர் கிரேஸி மோகன். கமல் மகிழ்ச்சியுடன் வாழ்த்து சொல்ல ரஜினியை நேரில் சந்தித்தார்.

அப்போது ரஜினியிடம் ‘சார் உங்களோட ராகவேந்திரா படத்தில் என்னால் வேலை செய்ய முடியவில்லை’ என சொன்னதும் ரஜினி ‘பரவாயில்லை சார் ராகவேந்திரர் நினைச்சத அருணாச்சலம் முடிச்சிட்டார்’ என சொல்லி சிரித்திருக்கிறார். உடனே, கிரேஸி மோகனின் மூளையில் ஒரு ஸ்பார்க் அடித்தது. ‘ஆண்டவன் சொல்றான்.. அருணாச்சலம் முடிக்கிறான்’ என பன்ச் சொல்ல ‘வாவ் சூப்பர்’ என அவரை பாராட்டினார் ரஜினி. ரஜினியின் பாராட்டில் கிரேஸி மோகனுக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டதாம். இதை அவரே ஊடகம் ஒன்றில் கூறியிருந்தார்.

அருணாச்சலம் படத்திற்கு வசனம் எழுதியதோடு மட்டுமில்லாமல் அந்த படத்தில் ரஜியின் நண்பராகவும் சில காட்சிகளில் கிரேஸி மோகன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top