எப்பவும் நான்தான் கெத்து!.. சம்பளத்தில் விஜயை தாண்டிய ரஜினி!.. நிரூபித்த சூப்பர்ஸ்டார்

Rajini vijay: திரையுலகை பொறுத்தவரை ஒரு நடிகரின் சம்பளம் என்பது அவர் கொடுக்கும் வெற்றியை பொறுத்து மட்டுமே அமையும். தொடர்ந்து வெற்றிப்படங்களாக அமைந்தால் பல மடங்கு சம்பளத்தை ஏற்றி கொடுப்பார்கள். அதே தோல்வி என்றால் சம்பளத்தை குறைத்துக்கொண்டே போவார்கள். இது ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்.
2.0 படத்திற்கு பின் ரஜினிக்கு அந்த அளவுக்கு பெரிய ஹிட் படம் அமையவில்லை. அப்போது அவர் ரூ.100 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களுக்கும் ரூ.100 கோடிக்கும் மேல்தான் சம்பளம் வாங்கினார். ஆனால், அந்த படங்கள் பெரிய ஹிட் அடிக்கவில்லை.
இதையும் படிங்க: மார்க் ஆண்டனி லுக்கில் மாஸ் காட்டுறாரே! புதிய பட போஸ்டருடன் பொங்கல் வாழ்த்து கூறிய சந்தானம்
ஒருபக்கம் விஜய் ஹிட் படங்களை கொடுத்து ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் கோட் படத்திற்கு அவரின் சம்பளம் ரூ.200 கோடி என சொல்லப்படுகிறது. அதேபோல், விக்ரம் பட ஹிட்டால் ரூ.30 கோடியாக இருந்த கமலின் சம்பளம் ரூ.150 கோடியாக மாறிவிட்டது.
ஒருபக்கம், ஜெயிலர் படத்தில் ரஜினியின் சம்பளம் ரூ.80 கோடியாக குறைந்தது. ரஜினியும் அவரின் மார்க்கெட் நிலவரத்தை புரிந்துகொண்டு அப்படத்தில் நடித்தார். ஆனால், ஜெயிலர் படத்தின் வெற்றியால் ரஜினியின் கிராஃப் மேலே ஏறிவிட்டது. இப்போது வேட்டையன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: அஜித் பட ஹீரோயினுக்கும் எனக்கும் லவ்வா? பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபலம்
எப்படியும் இப்படத்திற்கு அவர் 150 கோடி வரை சம்பளம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வேட்டையன் பட வியாபாரம் மற்றும் வசூலை பொறுத்து அந்த படத்தில் ரஜினியின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
இந்த படத்திற்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யார் தயாரிப்பாளர் என்பதை ரஜினி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், தனது சம்பளம் ரூ.210 கோடி என்பதில் கறாராக இருக்கிறாராம். லலித்குமார், ரெட் ஜெயண்ட் மூவிஸ், ஐசரி கணேஷ் என 3 தயாரிப்பாளர்களில் யார் இந்த சம்பளத்தை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ரஜினி கால்ஷீட் கொடுப்பார்.
அதேநேரம், யாராவது வேறு ஒரு தயாரிப்பாளர் ரூ.220 கோடி கொடுத்தால் அவரின் தயாரிப்பில்தான் ரஜினி நடிப்பார். மொத்தத்தில் விஜயின் சம்பளத்தை ரஜினி தாண்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோட் ஷூட்டிங்கில் ரசிகர்களை சந்திக்கும் விஜய்!… கெட்டப்பால் கவலைப்படாத வெங்கட் பிரபு!… ஏன் தெரியுமா?