Connect with us
rajkiran

Cinema History

எல்லோரும் தயங்கியபோது கமலுக்காக ரிஸ்க் எடுத்த ராஜ்கிரண்… இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..

Rajkiran: என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் நடிகராக மாறியவர்தான் ராஜ்கிரண். அந்த படத்தை தயாரித்ததும் அவர்தான். ராமராஜனை வைத்து அந்த படத்தை எடுக்க நினைத்தார் ராஜ்கிரண். ஆனால், ராமராஜனின் கால்ஷீட் கிடைக்கவில்லை. கஸ்தூரி ராஜா சொன்ன கதை ராஜ்கிரணுக்கு பிடித்திருந்தது.

இது தொடர்பாக ஆலோசனை செய்ய ராஜ்கிரணும், கஸ்தூரி ராஜாவும் இளையராஜாவிடம் போனார்கள். அப்போது ‘நீங்களே ஹீரோவாக நடியுங்கள்’ என ராஜ்கிரணை பார்த்து சொன்னவர் இளையராஜா. அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் நடிகராக மாறினார். படமோ சூப்பர் ஹிட். அந்த படத்தில் ராஜா போட்டு கொடுத்த பாடல்களும் செம ஹிட்.

இதையும் படிங்க: கரகாட்டக்காரன், 16 வயதினிலே படத்துல முதல்ல நான்தான் ஹீரோயின்! இப்போ புலம்பி என்ன செய்ய?

அதிலும், ராஜா பாடிய ‘பெண் மனசு ஆழம் என்று ஆம்பளைக்கும் தெரியும்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதன்பின் ராஜ்கிரண் அவரே இயக்கி சில படங்களில் நடித்தார். அப்படி வெளியான அரண்மனைகிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தனது படம் வெளியாகும்போது ராஜ்கிரண் படம் வெளியானால் ரஜினியே அவரை தொடர்பு கொண்டு ‘உங்கள் பட ரிலீஸை தள்ளி வைக்க முடியுமா?’ என கேட்ட சம்பவங்களும் நடந்தது.

சில படங்களில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். அதன்பின் அவருக்கு பல படங்களில் நடித்தார். சண்டக்கோழி, மஞ்சப்பை, பாண்டவர் பூமி, கொம்பன் என அவர் நடித்த பல படங்களும் ஹிட் அடித்தது. இப்போதும் ராஜ்கிரண் ஒரு படத்தில் இருந்தால் படத்தை பார்க்க போகும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: வேட்டையன் படத்தின் தற்போதைய நிலை என்ன?… ரிலீஸ் எப்போ தெரியுமா?

ராஜ்கிரணை நடிகராகவே பலருக்கும் தெரியும். ஆனால், தயாரிப்பாளர் ஆவதற்கு முன் பல படங்களை வாங்கியும் அவர் வினியோகம் செய்திருக்கிறார். அதாவது பிரபல வினியோகஸ்தாரக இருந்தார். அப்போது அவரின் பெயர் மொய்தீன் பாய். பாரதிராஜா இயக்கிய முதல் படமான பதினாறு வயதினிலே படம் உருவானபோது அப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை.

pathinaru

அதற்கு காரணம் அப்படத்தில் கமல் வெறும் கோமணம் காட்டி சில காட்சிகளில் நடித்திருப்பார். இதை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். படம் ஓடாது என வினியோகஸ்தர்கள் நினைத்தார்கள். ஆனால், அப்படத்தை நம்பி வாங்கி அதில் லாபமும் அடைந்தது அப்போது மொய்தின் பாயாக இருந்த ராஜ்கிரண்தான்.

google news
Continue Reading

More in Cinema History

To Top