கரகாட்டக்காரன், 16 வயதினிலே படத்துல முதல்ல நான்தான் ஹீரோயின்! இப்போ புலம்பி என்ன செய்ய?

Actress Nirosha: தமிழ் சினிமாவில் 80களில் ஒரு டாப் ஹீரோயினாக இருந்தவர் நடிகை நிரோஷா. கமல், ராம்கி, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர். திருமணமாகி தற்போது சின்னத்திரையில் ஜொலித்து வருகிறார்.

அதுவும் திருமணத்திற்கு பிறகு சின்னப்பாப்பா பெரியபாப்பா சீரியலில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இப்பொழுது கூட விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் இப்போது கோமதி என்ற கதாபாத்திரத்தில் நிரோஷா நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: வேட்டையன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வெளியான சூப்பர் அப்டேட்… ரிலீஸ் எப்போ தெரியுமா?

இந்த நிலையில் நிரோஷா அந்த காலத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போது ஏராளமான பல நல்ல பட வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கரகாட்டக்காரன் மற்றும் 16 வயதினிலே படங்களை சொல்லலாம்.

அதுவும் கரகாட்டக்காரன் படத்தில் ஒரே ஒரு நாள் கால்ஷீட் கேட்டு கங்கை அமரன் நிரோஷாவிடம் கேட்ட போது அந்த சமயத்தில் இணைந்த கைகள் திரைப்படத்தில் நடித்து வந்தாராம் நிரோஷா. அதன் காரணமாகவே அந்தப் படத்தில் நடிக்காமல் போனதாம்.

இதையும் படிங்க: கூட நடிச்ச ஆளுசார் நான்.. காசு பணமா கேட்க போறேன்! விஜயை பார்க்க சென்ற இடத்தில் அவமானப்பட்ட நடிகர்

ஆனால் அந்த இரு படங்களில் நடித்திருந்தால் கண்டிப்பாக என்னுடைய மார்கெட் வேறு எங்கேயோ போயிருக்கும் என நிரோஷா தற்போது அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். நேற்றுதான் அவர் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியானது.

அந்தப் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார் நிரோஷா. அந்த காலத்தில் ரஜினியுடன் நடிக்காமல் போன நிரோஷா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகைகளை காதல் வலையில் வீழ்த்திய கமல்ஹாசன்… லிஸ்ட் என்னங்க இவ்வளோ பெருசா போகுதே?

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it