Cinema History
நடிகைகளை காதல் வலையில் வீழ்த்திய கமல்ஹாசன்… லிஸ்ட் என்னங்க இவ்வளோ பெருசா போகுதே?
Kamalhassan: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் எத்தனை கெட்டியோ அது போல அவர் காதல் மன்னன் என்பதிலும் சந்தேகமே இல்லை. அவரின் காதல் வலையில் இருந்த நடிகைகளின் எண்ணிக்கை மட்டும் இத்தனையா? யார் இருந்தனர் எப்படி பிரிந்தனர் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் சினிமா ஆரம்பத்தில் ஸ்ரீவித்யாவை காதலித்தார். ஆனால் வித்யாவின் அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. இருவருக்குள்ளும் அது பிரிவை ஏற்படுத்தியது. தொடர்ந்து கொஞ்ச நாளிலேயே வாணி கணபதியை கல்யாணம் செய்து கொண்டார். அந்த கல்யாணமும் ரொம்ப நாட்கள் நீடிக்கவே இல்லை.
இதையும் படிங்க: முத்துவை துரத்த வழித்தேடும் ரோகினி… மீனாவுக்கு ஸ்ருதியால் வந்த அடுத்த பிரச்னை… முடியலப்பா
இதுமட்டுமல்ல, பாலிவுட் நடிகை ரேகா, ஸ்ரீசுதா என ஏழு பெண்களை காதலித்திருக்கிறார் என்றும் நடிகை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். 1978ம் ஆண்டு வாணி கணபதியை விவகாரத்து செய்துவிட்டார். பின்னர் கொஞ்ச நாட்களிலேயே அவருக்கும் சரிகாவுக்கும் காதல் பிறந்தது.
இருவரும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்த பின்னரே சிவாஜி முன்னிலையில் 1988ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதை தொடர்ந்து 2004ம் ஆண்டு சரிகாவும் கமலிடம் இருந்து பிரிந்தார். அதற்கு கௌதமியுடனான காதலே காரணம் எனக் கூறப்படுகிறது.
கௌதமிக்கு புற்றுநோய் ஏற்பட்ட சமயத்தில் கமலே முழு ஆதரவாக இருந்தார். இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் மகளின் பாதுகாப்பு கருதி கமலை பிரிவதாக அவரும் அறிவித்து சென்றார். அதற்கிடையில் சிம்ரனுக்கு கமலுக்கும் காதல் கசிந்தது.
இதையும் படிங்க: பிரபல நடிகரால் சினிமா வாழ்க்கையை மொத்தமாக இழந்த நக்மா…நடிகர் என்ன ஆனார் தெரியுமா?
ஒருகட்டத்தில் அவரை தன் வீட்டினருக்கு அழைத்து சென்று கமல் அறிமுகப்படுத்தினாராம். ஆனால் பூஜா கடைசியில் சினிமாவில் இருந்து விலகி தன் கணவருடன் செட்டில் ஆகிவிட்டார். எனக்கும், கமலுக்கும் நட்பு மட்டும் தான் எனவும் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது. வெளில தெரிஞ்சே இத்தனை பேரா?