Connect with us

Cinema History

பிரபல நடிகரால் சினிமா வாழ்க்கையை மொத்தமாக இழந்த நக்மா…நடிகர் என்ன ஆனார் தெரியுமா?

Nagma: தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளால் உச்ச நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு பெற்ற நக்மா திடீரென மொத்த சினிமா கேரியரை இழந்ததற்கு காரணமே ஒரு நடிகரால் தான். ஆனால் அந்த நடிகர் இன்னமும் சினிமாவில் இருக்கும் நிகழ்வு குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

மாடலிங்கில் தன் கேரியரை தொடங்கியவர் நக்மா. அப்போ ஷங்கர் தன்னுடைய காதலன் படத்துக்கு ஹீரோயினை தேடிக்கொண்டு இருக்கிறார். ஜென்டில்மேன் படத்தின் வெற்றிக்கு பின்னர் முன்னணி நாயகிகள் அந்த படத்துக்கு போட்டி போடுகின்றனர். ஆனால் ஷங்கர் புதுமுகத்தினை தேடிக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா!.. அட தெரியாம போச்சே…

அப்போது தான் ஆடிஷன் நடக்கிறது. அந்த நேரத்தில் நக்மாவின் தெலுங்கு படத்தினை ஷங்கர் பார்த்துவிட அவரையே காதலனுக்கு ஓகே செய்துவிடுகிறார். முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுக்க அடுத்து ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படம் உலகளாவிய ஹிட் நக்மாவின் கேரியர் எக்கசக்கமாக உயர்ந்தது. தொடர்ந்து, பல மொழி சினிமாவில் நடிக்க தொடங்கினார். இருந்தும் தமிழ் படங்களுக்கே நக்மா அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். பெரிய நாயகியாக இருந்தாலும் நக்மா பல வருடம் சினிமாவில் இல்லை.

இதையும் படிங்க: அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..

அதுக்கு காரணம் கிட்டத்தட்ட கிசுகிசுவே என்பது தான் அதிர்ச்சியான செய்தி. நக்மாவுக்கும், சரத்குமாருக்கும் காதல் என்று தொடர் கிசுகிசுக்கள் பரவியது. அதற்கு சரத்குமார் மீடியாக்கள் மீது கோபத்தினை காட்டினார். இருந்தும் நக்மாவுக்கு ஈசிஆரில் தனி வீடு வாங்கி கொடுத்து இருப்பதாகவும் தனிக்குடித்தனம் செய்கிறார்கள். ரகசிய திருமணம் ஆகிவிட்டது என தொடர் வதந்திகள் வந்தது. 

அதில் சரத்குமாரின் புகழ் கொஞ்சமும் அசரவே இல்லை. ஆனால் நக்மாவின் கேரியர் சறுக்கியது. கிட்டத்தட்ட காணாமல் போய்விடும் நிலைக்கு வந்தவர். பின்னர் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்குள் நுழைந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முத்துவை துரத்த வழித்தேடும் ரோகினி… மீனாவுக்கு ஸ்ருதியால் வந்த அடுத்த பிரச்னை… முடியலப்பா

google news
Continue Reading

More in Cinema History

To Top