சினிமா என்பது ஒரு கனவுலகம் என்பார்கள். உள்ளே நுழைவது என்பதே குதிரைக்கொம்பு. 70களில் மற்றும் 80களில் எல்லாம் கிராமங்களில் இருந்து இளைஞர்கள் பலர் சினிமா கனவுகளோடு சென்னைக்கு படையெடுப்பார்கள். அங்கு போய் அவர்கள் படும் கஷ்டங்களை சொல்லி மாளாது.
அன்றாடம் ஒருவேளை சாப்பாட்டுக்கே திண்டாட வேண்டிய நிலைமை வந்து விடும். சினிமாவிற்குள் நுழைவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அந்த வகையில் ரஜினிகாந்தும் தனது ஆரம்பகாலகட்டத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டாராம். அப்போது நடந்த ஒரு சுவையான சம்பவத்தைப் பார்ப்போம்.
இதையும் படிங்க: கேரவனில் சரக்கடித்த அஜித்!.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!.. நம்மாளுங்க என்ன பண்ணாங்க தெரியுமா?…
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மறக்கவே முடியாத வருடம் 1974. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிலிம் இன்ஸ்டிட்யூட் ஃபீஸ் கட்டவே ரொம்ப சிரமப்பட்டாராம் சிவாஜிராவ் என்ற ரஜினி. அப்போது ராயப்பேட்டையில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வீட்டில் தங்கினாராம். பல நாள்கள் அங்கு சாப்பாட்டுக்கே திண்டாட்டம் தானாம். ஒரு வேளை சோறு கிடைப்பதே கஷ்டமாம்.
அந்த நேரத்திலும் கிடைக்கிற சில்லரைகளை சேர்த்து நண்பர்களை அழைத்துக் கொண்டு உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் செல்வாராம். அந்த ஓட்டலின் முதலாளி சர்தர் நாராயணராவ் ‘வந்துட்டாங்கடா வருங்கால ஸ்டார்கள்’னு தமாஷாக வரவேற்புக் கொடுப்பாராம். வயசுல பெரியவரான அவரை அப்பான்னு தான் ரஜினி கூப்பிடுவாராம்.
இதையும் படிங்க: இளையராஜா போட்ட மெட்டையே பாடலாக்கிய கவிஞர் வாலி.. என்ன பாடல் தெரியுமா?
ஒருமுறை நண்பர் விட்டலோடு ஓட்டலுக்குச் சென்றாராம் ரஜினி. அங்கு இருந்த ராவிடம் அப்பா என் கையில நாலு இட்லிக்கான காசு தான் இருக்கு. விட்டலுக்கு மட்டும் இட்லி கொடுங்க. என்னைக் கேட்டா பசிக்கலன்னு சொல்லிடுறேன்னு சொன்னாராம் ரஜினி.
அப்போது ராவ் ‘போடா அசட்டுப்பயலே என்ன வேணாலும் ரெண்டு பேரும் கேட்டு வாங்கி சாப்பிடுங்க. காசைப் பத்திக் கவலைப்படாதேன்’னு சொல்லி தோளைப் பிடித்து அழுத்து ரஜினியை உட்கார வைத்தாராம்.
அதுதான் சமயம் என்று ரெண்டு பேரும் மூக்கு முட்ட சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டார்களாம். ஆனால் கடைசி வரையிலும் பில்லே வரவில்லையாம். ரஜினி போய் கேட்டதற்கு ‘போ போ அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று சொல்லி அனுப்பி வைத்தாராம் ராவ்.
இதையும் படிங்க: குருவிடமே சீன் போட்ட ரஜினிகாந்த்.. ஆனா இந்த பிரபலத்துக்கு மட்டும் இதை செய்தாராம்..!
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…