Cinema History
ரஜினி அதுக்கு வொர்த்!. ஆனா கிடைக்கவே இல்ல.. கடைசி வரை வருத்தப்பட்ட பாலச்சந்தர்…
சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்து வந்த ரஜினியை தனது அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் பாலச்சந்தர். முதல் படத்தில் திக்கி திக்கி தமிழ் பேசி, எப்படியோ நடித்து முடித்தார் ரஜினி. அதன்பின் ரஜினிக்கு கொடுத்த வாக்குறுதிபடி அடுத்து தான் இயக்கிய 2 படங்களிலும் ரஜினியை நடிக்க வைத்தார்.
அதில் மூன்று முடிச்சி திரைப்படம் ரசிகர்களிடம் ரஜினியை பிரபலப்படுத்தியது. அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் ரஜினி நடித்தாலும் அவர்கள், நினைத்தாலே இனிக்கும், தப்புத்தாளங்கள், தில்லு முல்லு, நெற்றிக்கண் என பாலச்சந்தரின் பல திரைப்படங்களில் ரஜினி நடித்தார். ஒருகட்டத்த்தில் வசூல் மன்னனாக மாறி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார்.
இதையும் படிங்க: என் மகனை ரஜினியிடம் காட்டி ‘யார் போல் இருக்கிறான்?’ என கேட்பேன்!.. பலவருடங்கள் கழித்து பேசும் நடிகை..
ரஜினி சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தை பெற்றபின் அவரை வைத்து படமெடுக்க பாலச்சந்தர் விரும்பவில்லை. ஏனெனில், ஜனரஞ்சக, மசாலா படங்களில் ரஜினி நடிக்க துவங்கிவிட்டதாலும், அதுவே திரையுலகினருக்கு வசூலை கொடுப்பதாலும் அதையே தனது ரூட்டாக மாற்றிக்கொண்ட ரஜினிக்கு இனிமேல் என்னால் கதை எழுத முடியாது என நினைத்துவிட்டார்.
ஆனால், ரஜினி நடிப்பில் உருவான ஜனரஞ்சகமான திரைப்படங்களை பாலச்சந்தர் தயாரித்தார். அதில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஒருமுறை ரஜினியை பற்றி பேசிய பாலச்சந்தர் ‘நான் இல்லை என்றாலும் ரஜினி வேறு படங்களில் நடித்து கண்டிப்பாக சினிமாவுக்கு வந்திருப்பார். ரஜினியை நான் அறிமுகம் செய்து வைத்தேன். வாழ வைத்தேன் என சொல்கிறார்கள். அது ஒரு காலம். ஆனால், நான் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டபோது என் நிறுவனத்தில் நடித்து எனக்கு பலமுறை உதவி செய்தவர் அவர். கடுமையான உழைப்பு மூலம்தான் அவர் இந்த இடத்தை பிடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினிகிட்ட எனக்கு இருக்க ஒரே வருத்தம் இதுதான்!.. ஃபீலிங்ஸ் காட்டும் குஷ்பு…
கமலை போல ரஜினியால் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க முடியாது. அது ஆபத்தும் கூட. ஏனெனில், படம் தோல்வியடைந்தால் பலரும் பாதிக்கப்படுவார்கள். அதை புரிந்து வைத்திருப்பதால்தான் ரஜினி அதையெல்லாம் செய்வதில்லை. ரஜினியை எந்த நடிகரோடும் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அப்படி ஒப்பட வேண்டுமெனில் நான் அமிதாப்பச்சனோடு அவரை ஒப்பிடுவேன். அவரை போலவே நடிப்பில் ஆர்வம், அர்ப்பணிப்பு, உழைப்பு என எல்லாமே கொண்டவர்தான் ரஜினி’ என பாலச்சந்தர் கூறினார். மேலும், ரஜினி ஒரு மிகச்சிறந்த நடிகர். பல திரைப்படங்களில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்’ என பாலச்சந்தர் வருத்தப்பட்டு பேசியிருந்தார்.
இதையும் படிங்க: 16 ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியுடன் மீட்டிங்!.. லைக்காவுக்கு போட்டியா களமிறங்கும் தயாரிப்பாளர்…