பழகிய மாட்டை பிரிய முடியாமல் கதறி அழுத ராமராஜன்!.. அதனாலதான்பா அவரு பசுநேசன்!.

by சிவா |
ramarajan2
X

Actor Ramarajan: தியேட்டரில் வேலை செய்து வந்த குமரேசன் சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போது பெரிய இயக்குனராக இருந்த இராம நாராயணனிடம் உதவி இயக்குனராக வேலை செய்தார். பல படங்களில் வேலை செய்த அவர் படம் இயக்கவும் முயற்சி செய்தார்.

ஆனால், காலம் அவரை நடிகராக மாற்றியது. குமரேசன் என்கிற பெயரை ராமராஜன் என மாற்றிக்கொண்டார். சினிமாவில் நடிக்க துவங்கி கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களிடம் பிரபலமானார். எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் என பல படங்களில் நடித்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் ராமராஜனின் திரைவாழ்வில் முக்கியமான படமாகும்.

இதையும் படிங்க: என் படத்துக்கு அவர்தான் வேணும்!. அடம்பிடித்து பட்ஜெட்டை ஏத்திவிட்ட ராமராஜன்..

ஏனெனில் அந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் ஹிட் அடித்தது. சில தியேட்டர்களில் ஒரு வருடம் கூட இப்படம் ஓடியது. இந்த படத்திற்கு பின் தொடர்ந்து 3 வருடங்கள் ராமராஜன் பிஸியாக இருந்தார். பல திரைப்படங்களிலும் நடித்தார். பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

சில சமயங்களில் ராமராஜன் படம் வெளியானபோது கமல், ரஜினியே தனது படங்களை ரிலீஸ் செய்ய யோசித்த சம்பவங்களும் நடந்தது. ராமராஜனை ரசிகர்கள் செல்லமாக பசுநேசன் என அழைப்பார்கள். ஏனெனில், அவர் நடிக்கும் படங்களில் மாடுகளுடன் சில காட்சிகளில் நடிப்பார்.

இதையும் படிங்க: நைட் 2 மணிக்கு! அதுவும் சட்டையில்லாமல் – ராமராஜன் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த நளினி

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடித்தபோது மதுரை பக்கத்தில் இருந்த ஒரு ஊரில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது பேச்சி என்கிற பசு மாடு மற்றும் அதன் கன்னுக்குட்டியுடன் ராமராஜன் பழகியுள்ளார். தண்ணி வைப்பது, புல் போடுவது என சிலநாட்கள் ராமராஜன் செய்ய பேச்சி மாடும் அவருடன் நன்றாக பழகிவிட்டது.

ramarajan

அந்த படத்தில் அவர் பாட்டு பாடிக்கொண்டே பால் கறப்பது போல வரும் காட்சி கூட உண்மையிலேயே எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்தபோது ‘பேச்சியை நான் எப்படி பிரிவது?’ என ராமராஜன் கண்கலங்கியுள்ளார். அதன்பின் 2 வருடங்கள் கழித்து அந்த ஊருக்கு ராமராஜன் போனபோது பேச்சி மாடு இறந்துபோனதை கேள்விப்பட்டு ராமராஜன் கதறி அழுதாராம்.

இதையும் படிங்க: வசூலில் கமல் படங்களை மிஞ்சிய ராமராஜன் படங்கள்.. இதுதான் காரணமாம்!

Next Story