விஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் ராமராஜன்! நெல்லை, ஆலங்குளத்தில் பிரச்சாரம்?

Published on: April 11, 2026
vijay-ramarajan
---Advertisement---

தமிழக சட்டசபை தேர்தல் கள உச்சகட்ட பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தவெக தலவர் விஜய் த்மிழகமெங்கும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டு வருவது மற்ற அரசியல் கட்சிகளை மலைக்க வைத்துள்ளது. வரும் தேர்தலில் தவெக ஒரு கேம் சேஞ்சராக இருக்க வாய்ப்பு உல்ளதகவும் அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவக நடிகர் ராமராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. 80களில் மக்கள் நாயகனாக’ வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். அப்போது ரஜினிக்கே ட்ஃப் கொடுத்தவர் அவர். தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசியான அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக வலம் வந்தவர். 1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். தென் மாவட்டங்களில், குறிப்பாக முக்குலத்தோர் சமுதாய மக்களிடையேயும், கிராமப்புறப் பெண்களிடையேயும் ராமராஜனுக்கு இன்றும் தனி செல்வாக்கு உள்ளது. சமீபகாலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராமராஜன், தற்போது மீண்டும் களமிறங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக ராமராஜன் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் சின்னமான ‘விசில்’ சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமராஜனின் பிரச்சாரப் பயணம், தென் மாவட்டங்களில் தவெக-விற்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.