அம்மா பாடிய பாடலை மெட்டாக்கிய இளையராஜா!.. அட அது சூப்பர் ஹிட் பாட்டாச்சே!...

எந்த ஒரு கலையும் நிஜ வாழ்க்கையிலிருந்து எடுக்கப்படும்போதுதான் அது தன் உயரத்தை எட்டும். அதன் முழு அர்த்தத்தையும் பெறும். அப்படி வாழ்வியல் பாடமாக வெளிவந்த கலைகள் பல வருடங்கள் கழித்து பேசப்படும். அது நாவலாக இருந்தாலும் சரி. திரைப்படம் மற்றும் இசையாக இருந்தாலும் சரி.
இசைஞானி இளையராஜாவை எல்லோருக்கும் பிடித்துப்போனதற்கு காரணம் அவரின் இசையில் மண் வாசனை இருந்தது. ‘அன்னக்கிளி உன்ன தேடுதே’ என அவர் போட்ட முதல் பாடலில் ஒரு கிராமத்து பெண்ணின் ஏக்கம் அப்படியே இருக்கும். செந்தூரப்பூவே செந்தூரப்புவே பாடல் ஒரு கிராமத்து குமரியின் மனதை, அவளின் விருப்பத்தை அப்படியே படம் போட்டு காட்டும்.
இதையும் படிங்க: ரஜினியை வெளியே துரத்திய ஹோட்டல் மேனேஜர்!.. அவமானத்தை தாண்டி சாதித்த சூப்பர்ஸ்டார்…
அதனால்தான் ராஜாவின் இசை பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. 80களில் தமிழ் சினிமாவை காப்பாற்ற வந்த கடவுளாக இருந்தார் இளையராஜா. அவரின் இசையை நம்பியே திரைப்படங்கள் உருவானது. இயக்குனர் வசனங்களால் சொல்ல முடியாததை கூட ராஜா தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களுக்கு கடத்தி விடுவார்.
அதனால்தான் அவரை தேடி அப்போது எல்லோரும் சென்றனர். முதலில் இளையராஜா இசை என்பதை உறுதிசெய்துவிட்டுதான் படத்திற்கான மற்ற வேலையை துவங்குவார்கள். ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் ராஜா இப்போதும் தனது இசையை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: ரஜினியின் அந்த படத்தால் எனக்கு 4.5 கோடி நஷ்டம்… ஓபனாக சொன்ன பிரபலம்…
இந்நிலையில், சாமானியன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராமராஜன் ‘இளையராஜா போல ஒரு திறமை சாலியை உலகில் எங்குமே பார்க்க முடியாது. அவர் தொட்ட உச்சத்தை.. அவரின் புகழை எந்த இசையமைப்பாளரும் தொடவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து உலகம் முழுவதும் பிரபலமானவர். அதற்கு நாம் பெருமைப்பட வேண்டும். என் படங்கள் ஹிட் அடிக்க காரணமே அவரின் பாடல்கள்தான்.
அவரின் அம்மா சின்னத்தாய் கும்மி அடிக்கும்போது ‘தானன்ன நானன்ன நானன்னே’ என பாடிய ராகத்தை அப்படியே ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலுக்கு டியூனாக மாற்றினார். அவரின் அம்மா அவருக்கு வைத்த பெயர் ராசைய்யா. அவரின் பெயரிலேயே இசை இருக்கிறது’ என ராமராஜன் பேசி இருந்தார்.