மொத்த படத்தையும் மூணு தடவை டப்பிங் பண்ணுனேன்!.. – சூது கவ்வும் நடிகரை படுத்தி எடுத்த மணிகண்டன்…

by Rajkumar |
மொத்த படத்தையும் மூணு தடவை டப்பிங் பண்ணுனேன்!.. – சூது கவ்வும் நடிகரை படுத்தி எடுத்த மணிகண்டன்…
X

சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மணிகண்டன். இவர் வெகு காலமாக சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார். ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகதான் இவர் சினிமாவிற்கு வந்தார். ஆனால் படத்தின் இயக்கம், நடிப்பு பல விஷயங்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார் மணிகண்டன்.

இதனையடுத்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் மணிகண்டன். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு காலா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் ரஜினிக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு ஜெய் பீம் திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ஜெய் பீம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் மணிகண்டன். அதனை தொடர்ந்து நல்ல கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்சமயம் குட் நைட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுக்குறித்து நடிகர் ரமேஷ் திலக் ஒரு பேட்டியில் கூறும்போது குட் நைட் படத்தின் டப்பிங் இன்சார்ஜாக மணிகண்டன்தான் இருந்தார். அவருக்கு டப்பிங் சரியாக இல்லை என தோன்றியதால் மொத்த படத்தையும் என்னை வைத்து மூன்று தடவை ரீ டப்பிங் செய்தார்.

அந்த அளவிற்கு திரைப்படங்கள் சரியாக வரவேண்டும் என நினைப்பவர் மணிகண்டன் என மணிகண்டன் குறித்து கூறியிருந்தார் ரமேஷ் திலக். ரமேஷ் திலக், மணிகண்டன் இருவருமே வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர்…

இதையும் படிங்க: இளையராஜாவிற்கு எதிராக கொம்பு சீவி விட்டவரே இவர்தானா? கங்கை அமரன் சினிமாவிற்கு வரக் காரணம்

Next Story