‘குற்றப்பரம்பரை’யில் ஹீரோவாக களமிறங்கும் பாகுபலி நடிகர்! கேப்டன் வாரிசுக்கு கல்தாவா?
தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் சமீப காலமாக மிகவும் பிரபலமான நாவல்களை எடுத்து அதை திரைப்பட கதைகளாக உருவாக்கி மக்கள் முன்பு வெளிக்கொண்டு வர இயக்குநர்கள் மாறி மாறி முயற்சி செய்து கொண்டு வருகின்றனர். இந்த வகையில் பிரபலமான நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்கி அதில் வெற்றியும் கண்டார் மணிரத்தினம்.
மீண்டும் அதே புத்துணர்ச்சியுடன்
அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வெற்றிமாறனும் நாவலை அடிப்படையாகக் கொண்டுதான் விடுதலை படத்தை எடுத்தார். அந்த வகையில் ஷங்கரும் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் வேல.ராமமூர்த்தியின் பிரபலமான நாவலான குற்றப்பரம்பரை நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் சசிகுமார் வெப் சீரியஸ் ஆக எடுக்க முடிவெடுத்திருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகிக் கொண்டே வந்தன.
இந்த நாவலை படமாக்க ஏற்கனவே பாரதிராஜாவும் பாலாவும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அதை இப்பொழுது சசிகுமார் வெப் சீரியஸாக எடுக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. இப்போது சசிகுமார் ஒரு நல்ல ஃபார்மில் இருப்பதால் மீண்டும் ஒரு குதூகலத்துடன் ஆன டைரக்ஷனை காண முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
குழப்பம் நிறைந்த குற்றப்பரம்பரை
இந்த நிலையில் இந்த நாவலில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக அவருக்கு பதிலாக பாலிவுட்டில் பட்டைய கிளப்பும் இயக்குனரான அனுரக் கஷ்யப் நடிப்பதாக இடையில் செய்திகள் வெளியானது. ஆனால் மீண்டும் சண்முக பாண்டியன் இந்த நாவலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் சண்முக பாண்டியன் இந்த நாவலில் வில்லன் ஆகத்தான் நடிக்கிறாராம்.
இதையும் படிங்க : தொடர் தோல்வி! விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த திடீர் முடிவு
அப்போ ஹீரோ யார் என்றுதானே கேட்கிறீர்கள்? அதில் தான் டிவிஸ்ட் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா தான் இந்த நாவலின் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம்.