இப்படியெல்லாமா சீன் வைப்பாங்க! படம் பாக்கவே தோணல.. வெளிப்படையாக விமர்சித்த ஆர்ஜே பாலாஜி

Actor RJ Balaji: தமிழ் சினிமாவில் ஒரு தனி டிராக்கில் பயணித்துக் கொண்டிருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக இருந்து பலபேர் மனதை கொள்ளையடித்த ஆர்.ஜே.பாலாஜி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதன் பின்னர் எல்.கே.ஜி என்ற படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் அரசியலை கேலிக்கூத்தாக காட்டியதால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நயனுடன் நடித்தார்.

இதையும் படிங்க: நாங்க செத்து அஞ்சு வருஷமாச்சு… கேப்டனின் அஞ்சலி நிகழ்ச்சியில் மன்சூர் உருக்கம்

இந்தப் படத்திலும் ஆன்மீகம் என்ற பெயரில் மக்கள் செய்யும் செயல்களை நகைச்சுவை கலந்து சொன்னதால் இந்தப் படமும் அமோக வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து வீட்ல விஷேசம் என்ற படத்தில் நடித்து அந்தப் படத்திலும் வெற்றியை கண்டார் ஆர்.ஜே.பாலாஜி.

இப்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்திருக்கும் பாலாஜி அந்தப் படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது ஒரு சேனலுக்கு பேட்டிக் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி ‘அனிமல்’ படத்தை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க:வீட்டில் சண்டை போட்டு.. வித்-அவுட் ரயிலில் போய் நடிகனான எம்.ஆர்.ராதா!.. பிளாஷ்பேக் செமயா இருக்கே!..

அதாவது அனிமல் படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை என்றும் பார்க்கவும் தோணவில்லை என்றும் கூறி அதற்கான காரணத்தையும் கூறினார். அதாவது மூடியிருக்கும் திரையரங்கிற்குள் 1000 பேர் வந்து ஒரு பெண்ணை துன்புறுத்துவது மாதிரியும் காலால் எட்டி உதைப்பது மாதிரியும் பாலியல் ரீதியாக தொல்லைப் படுத்துவது மாதிரியும் உள்ள காட்சிகளை பார்த்து கைத்தட்டி ரசிக்கிறார்கள் என்பதை பார்க்கவே என்னால் முடியாது.

ஏனெனில் இந்த மாதிரி காட்சிகள் எல்லாம் அனிமல் படத்தில் இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் கால் ஷூவை ஒரு பெண் தன் நாக்கால் நக்குவது மாதிரியும் காட்சிகள் இருக்கிறதாம். எங்கே இதை பார்த்து இவ்வளவு ரசிகர்கள் கைதட்டுகிறார்களே என எண்ணி நானும் என் படத்தில் வைத்து விடுவேனோ என்ற பயமும் எனக்குள்ளும் வந்துவிடும். அதன் காரணமாகவே அனிமல் படத்தை நான் பார்க்க வில்லை என்று ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் வச்ச கெடு! சொன்ன மாதிரியே செய்து காட்டிய நம்ம வீட்டுப் பிள்ளை

 

Related Articles

Next Story