கடவுளுக்கு அடுத்து கமல் சார் தான்… கண்கலங்க வைத்த மூத்த நடிகரின் நெகிழ்ச்சி பதிவு..

Published on: August 26, 2022
---Advertisement---

கமல்ஹாசன் உடன் பணியாற்றும் நபர்கள் நிறைய பேர் அவரை விட்டு அதிகமாக வெளியில் வர மாட்டார்கள். அவர்கள் ராஜ்கமல் நிறுவன நிரந்தர ஊழியர்கள் போலவே இருப்பார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, உலகநாயகனிடம் இன்னும் உலகளவில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கிறது என்ற கலைப்பசி.

இன்னொன்று , கமல்ஹாசன், தன்னை சுற்றி இருப்பவர்களை கவனித்து கொள்ளும் விதம். இவ்விரண்டும் தான் அவரை சுற்றி நிரந்தரமாக அந்த நட்சத்திரங்கள் இருபதற்கு காரணம்.

கமல்ஹாசன் படங்களில் அதிகம் நாம் காமெடியனாக பார்த்து ரசித்த நபர் என்றால் அது R.S.சிவாஜி. இவர் அண்மையில் கமல் செய்த உதவிகள் பற்றி கூறினார். மருதநாயகம் படத்திற்காக வேலை செய்து கொண்டு இருந்தோம்.

இதையும் படியுங்களேன் – அந்த விஷயத்தை மட்டும் செய்யாதீங்க தனுஷ்… தமிழ் சினிமாவின் பெருமையை சீண்டி பாக்காதீங்க… விவரம் இதோ…

அப்போது, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. நெஞ்சுவலி வந்துவிட்டது ரெம்ப சிவியர் பிராபலம் எனக்கு அது பற்றி தெரியாது. மருத்துவமனை சென்றேன். கண்ணை மூடினேன். கண்முழித்த போது கமல் சார் அருகில் இருந்தார். ‘என்ன சிவாஜி வேலையெல்லாம் இருக்கு நீ இங்க வந்துட்ட’ என விளையாட்டாய் கேட்டார்.

இதையும் படியுங்களேன் – மனுஷன் வாழ்கிறான்யா… நயன்தாரா – விக்கி ஹனிமூன் சீக்ரெட்ஸ்.. ஒரு நாள் வாடகை தெரியுமா.?!

kamal1_cine

பின்னர் மருத்துவரிடம் சென்று என்ன செலவானாலும் பரவாயில்லை சிவாஜி எனக்கு மீண்டும் அப்படியே வீடு வந்து சேர வேண்டும் என கூறிவிட்டு சென்றுவிட்டார். கொரோனா காலத்தில் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் இருந்தேன். இப்பொது வரையில் எனக்கு ராஜ் கமல் நிறுவனத்திடம் இருந்து மருந்து வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. மருந்து இல்லை என்றால் நான் இறந்து விடுவேன். கடவுளுக்கு அடுத்த படியாக எனக்கு கமல் சார் தான்.’ என மிகவும் நெகிழ்ச்சியாக கமல்ஹாசன் செய்த உதவிகள் பற்றி நடிகர் R.S.சிவாஜி கூறினார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.