Connect with us

Cinema History

கண்டக்டரா இருக்கும்போதே அவரு சூப்பர்ஸ்டார் தான்…!!! புட்டு புட்டு வைக்கும் எஸ்.ஜே.சூர்யா

நடிகர், குணச்சித்திர நடிகர், வில்லன், இயக்குனர் என பன்முக அவதாரம் எடுத்து நம்மை ரசிக்கச் செய்பவர்கள் வெகுசிலர் தான். அவர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. அவரைப்பற்றி அவருடைய வார்த்தைகளின் தொகுப்பை இங்கே பார்ப்போம்.

குஷி, வாலி, அன்பே ஆருயிரே, நியூ படத்தில எல்லாம் ஒரு டைரக்டரா மக்களை சந்தோஷப்படுத்துனோம். இப்ப அடுத்த கட்ட முயற்சியா ஆக்டிங்ல சந்தோஷப்படுத்துறேன்.

Maanaadu surya

நம்ம இது தான் நம்மோட ஜானர்னு நமக்கு பிடிச்சதுல போறத விட நம்ம ஒரு விஷயத்துல ரெடியாகி விடணும். நடிப்புங்கற ஒரு விஷயத்துல நம்ம ஒரு நடிகனாகி அதை ரெடி பண்ணி வைக்கும்போது நம்ம ஒரு எனர்ஜியை இப்படி த்ரோ பண்ணும்போது அங்கிருந்து பவுன்ஸ் ஆகி வரும். அது ஒரு நாள் இறைவி ஆகுது. ஸ்பைடர் ஆகுது.

நெஞ்சம் மறப்பதில்லை ஆகுது. மான்ஸ்டர் ஆகுது. மெர்சலாகுது. மாநாடாகுது. இன்னும் பல இது ஆகப்போது.
நாம யாரைப்பர்த்து வளர்ந்தோம்ங்கறது இருக்கு…இல்லையா…சோ…அவங்களோட பாதிப்பு இல்லாம இருக்காது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்ங்க. ஒரு சின்னப் பையன் நம்ம நடிச்சது நடிச்சிக்காட்டி ஒரு வீடியோ போட்டுருக்கான்.

அதைப் பார்த்தா ஓஹோ இப்படி நாம பண்ணியிருக்கலாமோ அப்படிங்கற மாதிரி இருக்கு. அவங்க நம்மள விட பயங்கரமா பண்ணியிருக்காங்க.

s.j.surya2

வாசுதேவநல்லூர் ஜஸ்டின் செல்வராஜ். ஜஸ்டின் னா அந்த ஜே. அப்பா வச்ச பேரு. ஜஸ்டின்கறவரு ஒரு புனிதர். அவரு ஞாபகார்த்தமா அப்பா வச்ச பேரு. சூர்யாங்கறது டைரக்டர் வசந்த் சார் கொடுத்த பேரு. அப்படி வந்தது தான் எஸ்.ஜே.சூர்யா. வாசுதேவநல்லூர் என் சொந்த ஊர். நான் பிறந்த ஊர். பிறந்த மண்.

என்ன சொல்லலாம்னா கொஞ்சம் அப்பாவிப் பயலா இருந்தான். இப்ப வந்து நிறைய பட்டு பட்டு பட் அந்த கேரக்டர் மாறாம நான் எவ்ளோ லைப்ல வந்து லேர்னிங் பார்த்த ஆளு. என் கேரக்டர மாத்திக்காம நான் வந்து சஸ்டெய்ன் பண்ணிக்கிறேன்.

என்னைய எத்தனை கிளைமேட் அடிச்சாலும் அதை பேஸ் பண்றதுக்கு நான் ரெடியாகிக்குவேனே ஒழிய என் கேரக்டர் மட்டும் மாறாது. அந்த ஜஸ்டின் இன்னமும் அப்படியே இருக்கான்.

நான் சூப்பர்ஸ்டாரோட பக்கத்துல இருந்து ஒர்க் பண்ணது இல்ல. பட் நிறைய கேள்விப்பட்டுருக்கேன். எல்லாருக்கும் கியூட்டா சொல்வாரு. அந்த பேஸ் பண்ற விஷயங்களுக்கு உண்மையா இருப்பாரு. இந்த அரசியல் ஸ்டேட்மெண்ட்னாலும் கூட நான் நினைச்சது உண்மைதான்.

பட் என்னால அதை செயல்படுத்த முடியுமான்னு தயங்கறதை வெளிப்படுத்தியிருக்கார். அதுக்காக அவரு எவ்வளவு வேதனைப்பட்டுருப்பாரு. என்னன்ன சைடு எபெக்ட்ட சந்திச்சிருப்பாரு. எதையும் அவர் செய்வார்.

sjs

சூப்பர்ஸ்டார் வந்து இன்னைக்கு சூப்பர்ஸ்டார் அல்ல. அவரு பஸ் கண்டக்டரா இருக்கும்போதே சூப்பர்ஸ்டார் தான். அந்த கேரக்டரும் அவரு உழைப்பும்தான். ஆக்சுவலா ரஜினி சாருக்குள்ள கொஞ்சம் சிவாஜி சாரும் உண்டு.

அது வேற மாதிரி பார்ம் ஆகி அப்படி வந்துருது அங்க. நம்ம இந்த ரெண்டையும் எடுத்துக் கையாளும்போது அது வேற மாதிரி வருது. ரஜினி சாருக்குள்ள சிவாஜி சாரும் இருக்காரு. எங்களுக்குள்ள ரெண்டு பேரும் இருக்காங்க.

google news
Continue Reading

More in Cinema History

To Top