கெட்டப்பேர்தான் மிச்சம்.. மனுஷனா மாத்திய விஜயகாந்தின் படம்.. புலம்பும் பிரபல இயக்குனரின் வாரிசு!..

Published on: November 25, 2022
sakthi_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என அறியப்படும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் பி.வாசு. இவர் சந்திரமுகி, சின்னத்தம்பி, மன்னன், உழைப்பாளி போன்ற வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். தற்சமயம் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் வாசு.

இவருடைய மகனும் நடிகருமான சக்தி குழந்தையாக இருக்கும் போதே நடிக்க வந்தவர். கிட்டத்தட்ட நடிகர் சிம்பு மாதிரி தான். முக்கியமாக நடிகன், சின்னத்தம்பி, செந்தமிழ் பாட்டு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார். பெரும்பாலும் அப்பாவின் இயக்கத்திலேயே திரையில் தோன்றினார் சக்தி.

Also Read

sakthi1_cine
vijayajanth

முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான படம் தொட்டால் பூ மலரும் திரைப்படம். இதுவும் வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த படமாகும். படம் வெளியான  முதல் சக்தியின் மீது ஒரு நல்ல வரவேற்பு இருந்தது. அழகான தோற்றம், நடிப்பு என முதல் படத்திலேயே ஓரளவு கவர்ந்தார்.

அதன் பின் நினைத்தாலே இனிக்கும் படத்திலும் தன் நடிப்பை பிரதிபலித்திருப்பார். அதுவும் அவர் நடிப்பில் வெளியான ‘அழகாய் பூக்குதே’ பாடல் அந்த அளவுக்கு ஹிட். இப்படி ஓரளவுக்கு வந்து கொண்டிருந்தவர் தொடர்ந்து படங்கள் ஃபிளாப் ஆனது. இதை பற்றி நடிகர் சக்தியிடமே கேட்ட போது சில உண்மைகளை கூறினார்.

sakthi2_cine
sakthi

அதாவது என்னுடைய சில பழக்கங்கள், தவறான நண்பர்களின் பழக்கம், யாரும் எனக்கு சரிவர அறிவுரை கூறவில்லை இதனாலேயே ஏகப்பட்ட மன அழுத்தத்திற்கு சென்று விட்டேன் என்று கூறினார். மேலும் போலீஸ் கேஸ் என்று சில பிரச்சினைகள் என் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது  என்றும் கூறினார்.

இந்த நிலையில் தான் விஜயகாந்தின் ‘சத்ரியன் ’ படம் பார்த்தேன். அந்த படம் தான் எனக்கு தூண்டுதலாக  இருந்தது. அந்த படத்தில் ஒரு காட்சியில் விஜயகாந்த் அவருடைய மகனிடம் ‘என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்கமா, போலீஸ் வேலைக்கே தகுதியில்லைனும் சொல்லிட்டாங்கமா’ என்று கூறுவார். உடனே அவருடைய மகன் உங்களால் முடியும் என்று உடற்பயிற்சி செய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும்.

sakthi3_cine
sakthi

அதைப் பார்த்து தான் எனக்கும் ஒரு  நம்பிக்கை வந்தது. ஆன்மீகம், ஸ்டண்ட் பயிற்சி என்று என் ஈடுபாடுகளை பெருக்கிக் கொண்டேன்.  மேலும் சிம்புவும் எனக்கு ஒரு இன்ஸ்டிரேஷன் தான். கிட்டத்தட்ட நானும் அவரும் ஒரே நிலைமைதான் இருந்தோம். ஆனால் இடையிலேயே பாருங்க சிம்புவிடம் எவ்ளோ மாற்றம் தெரிகிறது என்று. அதனால் தான் நானும் அதை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொண்டு இந்த அளவுக்கு மாறியிருக்கிறேன் என்று சக்தி கூறினார்.

sakthi4_cine
sakthi

மேலும் நடிகர் சக்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்  முதன் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நடிகை ஓவியா பிரச்சினையில் சிக்கி மேலும் சங்கடத்திற்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உபயோகித்த ட்ரிகெர் என்ற வார்த்தையால் ட்ரிகெர் ஸ்டார் என்றும் அறியப்பட்டார்.