Connect with us
samu

Cinema News

புது மாப்பிள்ளை வரவேற்பு! மிஸ் பண்ணுவாரா? பெட்டிப் படுக்கையை தூக்கிட்டு ஓடிய சமுத்திரக்கனி

Actor Samuthirakani: இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்தும் மொழி சினிமாக்களிலும் ஒரு வேண்டப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சமுத்திரக்கனி. அண்ணனாக, அப்பாவாக, தோழனாக என  அனைத்து பரிணாமங்களிலும் தன்னை பிரதிபலித்துக் கொண்டு ஒரு சிறந்த நடிகராக மக்கள் முன் அறியப்படுகிறார்.

இயக்குனராக தனது அறிமுகத்தை பதிவு செய்த சமுத்திரக்கனி தான் இயக்கும் படங்களில் ஒரு சிறு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஆரம்பித்ததன் விளைவுதான் இன்று ஒரு தவிர்க்கமுடியாத நடிகராக மாறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தங்க நிற மேனி தளதளன்னு இருக்கு!. மிச்சம் வைக்காம காட்டி ஏங்க வைக்கும் ஜான்வி!…

விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களிலும் சமுத்திரக்கனியை பார்க்க முடிகிறது. எதார்த்தமான நடிப்பு, வாழ்வியலை அப்படியே தன் கண்முன் கொண்டு வரும் அவரின் அபார நடிப்புதான் இன்றுவரை சினிமா அவரை விடவில்லை.

இந்த நிலையில் சமீபகாலமாக சமுத்திரக்கனி நடித்த தமிழ் படங்களை நாம் பார்க்க முடிவதில்லை. ஏனெனில் அவர் தெலுங்கில் மிகவும் பிஸியாக இருக்கிறாராம். மேலும் இனிமேல் தெலுங்கில்தான் அதிக படங்கள் நடிக்க போவதாகவும் கோடம்பாக்க வட்டாரங்கள் சில பேர் தெரிவித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஒரேயடியா சோப்பு போட்ட சன் பிக்சர்ஸ்!.. உங்க சங்காத்தமே வேண்டாம்னு முடிவு பண்ண விஜய்!..

அதற்கான காரணத்தையும் கூறியிருக்கின்றனர். கோலிவுட்டை விட தெலுங்கில் தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்களாம். அதுமட்டுமில்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் கையில் வைத்து சமுத்திரக்கனியை தாங்குகிறார்களாம்.

இந்த வரவேற்பு இங்கு கிடைப்பதில்லையாம். மேலும் அவர் இயக்கிய நடித்த வினோதய சித்தம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார். அந்தப் படத்தில் பவன் கல்யாண்தான் நடித்திருந்தார். அந்தப் படத்தை சிரஞ்சீவி பார்த்து சமுத்திரக்கனியை மிகவும் பாராட்டினாராம்.

இதையும் படிங்க: எப்பா! நீ வேற புதுசு.. உன்ன நம்பி இதெல்லாம் செய்ய முடியாது – விஜயின் வாரிசுக்கு இப்படி ஒரு எண்ட் கேட்டா?

பாராட்டியதோடு விடாமல் நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா என்ற கேள்வியையும் முன்வைத்திருக்கிறாராம். அதனால் சிரஞ்சீவியை வைத்து  சமுத்திரக்கனி ஒரு தெலுங்கு படம் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top