Connect with us

Cinema News

ரஜினிக்கு ஒரேயடியா சோப்பு போட்ட சன் பிக்சர்ஸ்!.. உங்க சங்காத்தமே வேண்டாம்னு முடிவு பண்ண விஜய்!..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் நடித்த நிலையில் அந்த படத்திற்கு ஆடியோ லான்ச் மற்றும் பெரிய அளவிலான புரமோஷன் என எதையுமே சன் பிக்சர்ஸ் செய்யவில்லை. மேலும் படத்தின் ரிசல்ட் டல்லடித்த நிலையில், நடிகர் விஜய்க்கு கார் பரிசாகவும் வழங்கவில்லை.

அதே நேரத்தில், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சாமி வந்து ஆடியது போல சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து தள்ளி இருந்தார். மேலும் ஜெய்லர் படத்தின் வெற்றியின் லாபத்தில் இருந்து பெரிய தொகையை செக் ஆகவும், பிரம்மாண்ட சொகுசு கார் ஒன்றையும் பரிசாகவும் வழங்கியிருந்தார்.

இதையும் படிங்க: எப்பா! நீ வேற புதுசு.. உன்ன நம்பி இதெல்லாம் செய்ய முடியாது – விஜயின் வாரிசுக்கு இப்படி ஒரு எண்ட் கேட்டா?

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசியில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 68 படத்தில் நடிக்க உள்ளார் விஜய்.

தளபதி 68 படத்திற்கு பிறகு தளபதி 69-வது படமாவது சன் பிக்சர்ஸ் உடன் விஜய் இணைவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புது சன் பிக்சர்ஸுக்கு பட்டை நாமம் திட்டிவிட்டார் விஜய் என்கிற பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: பேசாம உயிர், உலக்னு இருக்க வேண்டியதுதான்! எங்க போனாலும் குட்டு வாங்கும் விக்னேஷ்சிவன்

லியோ தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பிலேயே தளபதி 69-வது படத்தில் விஜய் நடிப்பார் என்கிற அப்டேட்களும் தற்போது கசிந்துள்ளன. லியோ படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகர் விஜய்க்கு பெரிய தொகையை அட்வான்ஸாக வழங்க இப்போதே லலித்குமார் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் சன் பிக்சர்ஸ் மற்றும் லைகா நிறுவனங்களுடன் நடிகர் விஜய்க்கு மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதால் இப்போதைக்கு அந்த இரு பெரிய நிறுவனங்களுடன் அவர் கூட்டணி வைக்க மாட்டார் என்றே தெரிகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top