Director Vignesh Shivan: தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் மக்களின் பேராதர்வை பெற்ற இயக்குனராக வலம் வந்தவர் விக்னேஷ் சிவன். போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது பயணத்தை தொடர்ந்தார்.
முதல் படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி இன்று வரை போடா போடி படத்தை பற்றி பெருமையாக பேசுவார். அது நல்ல படம் என்று விக்னேஷ் சிவனை பார்க்கும் போதெல்லாம் கூறுவார்.
இதையும் படிங்க: கார் கொடுத்தது அவரா இருக்கலாம்… ஆனா ஜெய்லரை விட இந்த படம் தான் அனிருத்துக்கு ஸ்பெஷலாம்…
விக்னேஷ் சிவனுக்கு மிகத்திருப்பு முனையாக அமைந்த படம் நானும் ரௌடிதான் திரைப்படம். இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
இதனை தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் விக்னேஷ் சிவன். நடிகை நயனை திருமணம் செய்த பிறகு அஜித்துடன் இணைந்து ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு சில பல பிரச்சினைகளால் அந்தப் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இதையும் படிங்க: சினிமாக்காக இப்படியா இறங்குவ…? தடாலடியாக இறங்கிய சூர்யா.. கடுப்பான சிவகுமார்?
ஆனால் அதன் பிறகு இன்றளவும் அஜித்தின் விடாமுயற்சி ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றது. அஜித் படத்தில் இருந்து விலகியது விக்னேஷ் சிவனுக்கு பெரும் அடியை கொடுத்தது. அதன் பிறகு அவர் எந்தப் படங்களையும் எடுக்காமல் குடும்பம், குழந்தைகள் என இருந்தார்.
அதன் பிறகு பிரதீப் ரெங்கநாதனுடன் ஒரு படம் பண்ண போவதாக தகவல் வெளியானது. சரி. அதையாவது ஆரம்பிப்பார் என்று பார்த்தால் ஏற்கனவே ஏஜிஎஸுக்கு பெரிய ஹிட் கொடுத்த பிரதீப் மீண்டும் அந்த நிறுவனத்திற்காக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.அதில் நடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரதீப் இருப்பதால் விக்னேஷ் சிவன் படம் இன்னும் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகர் இவரா? அட செம மேட்சுப்பா!