Connect with us

Cinema News

ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகர் இவரா? அட செம மேட்சுப்பா!

Ethirneechal Marimuthu: பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் எதிர்நீச்சல் சீரியலின் ஆதி குணசேகரன் கேரக்டரில் யார் நடிக்க இருக்கிறார் என்ற கேள்வி தான் பலரிடத்தில் தொக்கி நிற்கிறது. பலருக்கும் யாராக இருக்கும். மாரிமுத்துவை ரீப்ளேஸ் செய்ய ஒருவர் இனிமேல் தான் வரணும் என பலரும் கிசுகிசுக்கின்றனர்.

தமிழ் சீரியல் வரலாற்றிலேயே இப்படி ஒரு வெற்றியை எந்த ஒரு நாடகத்திற்கு கிடைத்து இருக்காது. ஆண்கள் முதல் பெண்கள் வரை தினமும் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதை மிஸ் செய்யாமல் இருந்தனர். அதிலும் இந்த நாடகத்தில் நடித்த ஆதி குணசேகரன் கேரக்டருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இதையும் படிங்க: முத இத முடிக்கணும்! லியோ ஆடியோ லாஞ்சில் பக்கா ப்ளான் போட்ட விஜய்… நல்ல ஐடியா தான்!.

ஏய் இந்தாமா என்ற டயலாக் அவரை ஃபேமஸ் ஆக்கியது. சன் டிவியில் பெரும்பாலும் ஒரு சீரியல் 1500 எபிசோடை தாண்டும். அப்படி தான் 500 எபிசோடை தாண்டிய எதிர்நீச்சல் சீரியலும் இன்னும் பல நூறு எபிசோட் கடக்கும். அதனால் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு இன்னும் பாப்புலாரிட்டி கிடைத்திருக்கும்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் இழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் எதிர்நீச்சல் சீரியலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கம்பீரமான ஆதி குணசேகரன் கேரக்டரில் யார் நடிப்பார் என பலரும் ஆவலில் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: நடிகைகள் விஷயத்தில் மம்மூட்டியை ஃபாலோ செய்யும் தல! அதனால் அவருக்கு கிடைச்ச பேரு என்ன தெரியுமா?

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிப்பார் என பல தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனரும், நடிகருமான வேல ராமமூர்த்தி கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாகவே இருப்பார் என பலரும் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

இதுகுறித்து சேனல் தரப்பிலும் பேச்சு வார்த்தை தீவிரமடைந்து இருக்கிறது. வேல ராமமூர்த்தி ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் கண்டிப்பாக எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் புதிய உச்சத்தினை பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எழுத்தாளரான இவர் கடந்த 2013 மதயானை கூட்டம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top