முத இத முடிக்கணும்! லியோ ஆடியோ லாஞ்சில் பக்கா ப்ளான் போட்ட விஜய்… நல்ல ஐடியா தான்!.

Leo Vijay: விஜய் தற்போது அரசியல் எண்ட்ரியால் தனக்கு இருக்கும் பிரச்னைகளை எல்லாம் முடிவு கட்டும் முடிவில் இருப்பதாகவும் வரிசையாக எல்லாத்தையும் ஒவ்வொன்றாக கிளியர் செய்யவும் தன்னுடைய டீமுக்கு அறிவுறுத்துகிறார். அதிலும் ஆடியோ லாஞ்சில் பெரிய விஷயம் ஒன்றை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம்.

தற்போது லியோ படத்தினை முடித்த விஜய் தளபதி68 பட வேளைகளில் இறங்கிவிட்டார். இதற்காக படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சமீபத்தில் தான் சென்னை திரும்பி இருக்கின்றனர். விஜய் லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை ஒட்டி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோபப்படுத்திய இயக்குனர்!. கடுப்பில் 58 பல்லவிகளை எழுதி கொடுத்த கண்ணதாசன்!.. அட அந்த படமா?!..

இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை புக் செய்வதற்கு ரெஸ்ட் கொடுத்து விட்டார். அட்லீயுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஜவான் படத்தால் அந்த முடிவில் தற்போது ஆட்டம் கண்டு இருக்கிறதாம். இதனால் அடுத்த பட இயக்குனர் யார் என்பது தற்போது வரை முடிவாகவில்லை.

சமீபத்தில் நடந்த ஐடி மீட்டிங்கில் இனிமேல் எந்த நடிகருடன் வம்பு வைக்க கூடாது. யாரையும் கேவலமாக பேசக்கூடாது. இதை வைத்து இனி விஜயின் பெயர் சமூகவலைத்தளத்தில் ட்ரோல் ஆகவே கூடாது என்பதை தெளிவாக கூறிவிட்டாராம்.

இதையும் படிங்க: விஜய் படத்தில் இருந்தே ஆட்டைய போட்ட வெங்கட்பிரபு? காப்பி அடிக்கிறது ஓகே… அதுக்குனு ப்ளாப் படத்தையா?

அதிலும், ஜெய்லர் பட நிகழ்ச்சியில் காக்கா, கழுகு கதையை சொல்லி அதற்கு மேலும் எண்ணெயை ஊற்றினார். இதற்கு விஜய் லியோ ஆடியோ ரிலீஸில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது விஜய் நான் சூப்பர்ஸ்டார் இல்லை என ரஜினிக்காக எதுவும் தான் பேசுவார். இதனால் ரஜினியின் ரசிகர்கள் சாந்தமாகி லியோ வசூலை சரிக்கட்டும் எனக் கிசுகிசுக்கின்றனர்.

 

Related Articles

Next Story