ரஜினிகாந்துக்கே இந்த நிலைமையா!.. ’கூலி’ படத்தை ஆரம்பத்திலேயே காலி பண்ண முடிவெடுத்த இளையராஜா?..

பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் படங்களுக்கு இளையராஜா இசையமைப்பது கிடையாது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்தின் டைட்டில் டீசர் வீடியோவுக்கு இளையராஜா இசையமைத்த பாடலை எந்த ஒரு அனுமதியும் வாங்காமல் பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே கடும் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பிரச்சனை செய்ய முடிவு செய்துவிட்டாரா இளையராஜா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘மை நேம் இஸ் பில்லா’ பாடல் உருவான சோக கதை! யுவனின் சோம்பேறித்தனத்தால் ஸ்தம்பித்த ‘பில்லா’ டீம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெற்ற “ வா வா பக்கம் வா.. பாடலில் வரும் டிஸ்கோ டிஸ்கோ” என்பதை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் கூலி படத்துக்காக வைத்துள்ள நிலையில் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இளையராஜாவுக்கு கிரெடிட்ஸ் கொடுக்கப்பட்டாலும் பணம் கொடுக்காமல் அந்த பாடலை பயன்படுத்தி இருப்பது மிகப்பெரிய தவறு என்றும் உரிய பணத்தை செலுத்தவில்லை என்றால் கூலி படத்தின் டைட்டில் டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார் இளையராஜா.

இதையும் படிங்க: வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே பெரிய பிரச்சனை இருக்கு!.. சந்துல சிந்து பாடிய பிரபலம்!..

சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா தொடுத்துள்ள வழக்கை கலாநிதி மாறன் எப்படி டீல் செய்யப் போகிறார் என்றும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு எதிராக இளையராஜா தனது படத்துக்கு இப்படி ஒரு பஞ்சாயத்தை கூட்டி இருப்பதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இளையராஜாவுக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு அந்த பாடலை பயன்படுத்தி இருக்கலாமே? என்றும் உரிய முறையில் அனுமதி கேட்டால் அவர் கொடுக்க மறுத்து இருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வரிசையா படங்களை முடித்துத் தள்ளும் கீர்த்தி சுரேஷ்!.. விஜய் அட்மின் படமும் ரெடியாகிடுச்சாம்!..

 

Related Articles

Next Story