மாரி செல்வராஜ் படத்துல நடிக்கிறேனா?.. திடீரென கேட்ட கேள்விக்கு டென்ஷனான கவின்.. என்ன ஆச்சு?..

வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என நடிகர் கவினை சுற்றி ஏகப்பட்ட பேச்சுகள் அடிபடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் கவின் விளக்கம் கொடுத்துள்ளார். நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கவின். அதற்கு முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து அப்போது ரசிகர்களை கவர்ந்தார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று கவின் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற லாஸ்லியாவை உருகி உருகி காதலித்தார். ஆனால் அந்த காதல் கைகூடாத நிலையில், மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே பெரிய பிரச்சனை இருக்கு!.. சந்துல சிந்து பாடிய பிரபலம்!..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நடித்து வெளியான லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா திரைப்படம் முதன்முறையாக அவரை 50 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக மாற்றியது.

இந்நிலையில் அடுத்ததாக வரும் மே 10 ஆம் தேதி இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், பிரீதி முகுந்தன், லால் உள்ளிட்ட பலல் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்திற்கான பிசினஸ் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நிச்சயம் இந்த படமும் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ‘கூலி’ என்னோட டைட்டில்! லோகேஷ் என்னிடம் எதுமே கேக்கல.. இதோ ஸ்டார்ட் ஆயிடுச்சே பிரச்சினை

கவின் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அது குறித்த கேள்விக்கு, தன்னைப் பற்றி பல வதந்திகள் உலா வருகின்றன என்றும் இதே செய்தி அவர் படித்தால் என்ன நினைப்பார் உன் கல்யாணத்துக்கு வந்தது ஒரு குத்தமாடான்னு அந்த ரூமரை ஜாலியாக சிரித்துக் கொண்டே சொல்லி அவருடன் படம் பண்ணவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது அது குறித்து என்ன சொல்றீங்க என்கிற கேள்விக்கு, ஒரு படத்தின் தயாரிப்பாளராக நான் இருந்தால் அந்த படம் குறித்த அப்டேட்டை கொடுத்து விடுவேன். நான் வெறும் நடிகன் மட்டும் தான் எதுவாக இருந்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் தான் உரிய நேரத்தில் அப்டேட் வெளியிடும் என கூலாக சொல்லியுள்ளார்.

இதையும் படிங்க: ‘கூலி’ என்னோட டைட்டில்! லோகேஷ் என்னிடம் எதுமே கேக்கல.. இதோ ஸ்டார்ட் ஆயிடுச்சே பிரச்சினை

 

Related Articles

Next Story