Connect with us
trisha

Cinema News

த்ரிஷாவையும் தூக்கியாச்சு! ‘விடாமுயற்சி’யில் அடுத்தடுத்து களமிறங்கும் ‘லியோ’ நடிகர்கள் – வில்லனும் அவரே

விடாமுயற்சி இப்போதுதான் வேகம் எடுத்து வருகிறது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பை  தொடங்கி ஜனவரியில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். அடுத்த வருடம் மே மாதம் படத்தை ரிலீஸ் செய்வதாக ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்த கையோடு மீண்டும் அஜித் 11 மாத காலம் பைக் ரைடு போகிறாராம்.

ஏற்கனவே 13 நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அஜித் படப்பிடிப்பிற்காக கொஞ்சம் பிரேக் விட்டிருக்கிறாராம். தொடர்ந்து 4 மாதம் படப்பிடிப்பை முடித்து விட்டு மறுபடியும் தனது பயணத்தை மேற்கொள்ள இருக்கிறாராம்.

இதையும் படிங்க : அங்க சுத்தி இங்க சுத்தி… ஷாருக்கான் தலையிலே கை வைத்த மீடியா… அடே எப்படி தெரிது என்னப்பாத்தா?

இந்த நிலையில் விடாமுயற்சியில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாதான் நடிக்கிறார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அவரை அடுத்து வில்லனாக ஒரு முக்கியமான நடிகரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

த்ரிஷாவை தொடர்ந்து இந்த நடிகரும் விஜயின் லியோ படத்திலும் நடித்திருக்கிறார்கள். நடிகர் சஞ்சய் தத்திடம்தான் வில்லனாக நடிக்க கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். சமீபகாலமாக வேற்று மொழி நடிகர்கள் தான் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

மலையாள நடிகர் பகத் பாசில் தொடர்ந்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கோலிவுட்டில் மின்னிக் கொண்டு வருகிறார். அதனை அடுத்து பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தும் அதே வகையில் பின் தொடர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க : நடிப்பு போர் அடிச்சு போச்சு! வேற ரூட்டுக்கு தாவிய சுகன்யா – இனி அவங்க காட்டுல மழைதான்

ஒரே ஸ்கீரினில் அஜித்தையும் சஞ்சய் தத்தையும் பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஒருவித உற்சாகத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் விடாமுயற்சி படத்தை ஒரே முச்சில் முடிக்கவும் அஜித் உட்பட மற்ற அனைவரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top