நடிப்பு போர் அடிச்சு போச்சு! வேற ரூட்டுக்கு தாவிய சுகன்யா - இனி அவங்க காட்டுல மழைதான்

தமிழ் திரையுலகில் 90களில் ஒரு முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சுகன்யா. நடிப்பு, நடனம் என பன்முகத்திறமைகள் வாய்க்கப் பெற்ற சுகன்யா குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர்.

அதிக கவர்ச்சி காட்டி நடிக்காத நடிகைகளில் சுகன்யாவும் ஒருவர். கமல், சத்யராஜ், பிரபு என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சுகன்யா ஏகப்பட்ட வெற்றிப்படங்களில் நடித்தவர். சினிமா மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்து அங்கேயும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

இதையும் படிங்க : ஆசையாக கேட்ட கிங்காங்… அட இதுக்கென்ன கேள்வி? அசால்ட்டு காட்டிய ஷாருக்கான்!

சினிமா வாய்ப்பு குறையத் தொடங்கிய நேரத்தில் தான் சின்னத்திரைக்கு போனார். ஆனந்தம் என்ற சீரியல் சுகன்யாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. சமீபகாலமாக சுகன்யாவை திரைப்பக்கம் பார்க்க முடிவதில்லை.

ஆனால் டான்ஸ் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறாராம் சுகன்யா. இந்தியன் படத்திற்கு பிறகு அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் சுகன்யாவை பற்றிய ஒரு புது அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது மலையாளத்தில் டி.என்.ஏ என்ற படம் தயாராகிக் கொண்டு வருகிறது. அந்தப் படத்திற்காக முதன் முதலில் தன்னை பாடலாசிரியராக அறிமுகப்படுத்த இருக்கிறாராம் சுகன்யா.

இதையும் படிங்க : ஒன்னு போதும் நின்னு பேசும்!.. வயசு பசங்க மனச கெடுக்கும் ஷிவானி நாராயணன்….

தமிழில் கவிதைகள் எழுதிவிடலாம். ஆனால் மலையாளத்தில் எப்படி ஒரு பாடலை எழுதுவார் என்று சந்தேகம் இருந்த நிலையில் அந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் தமிழ் வெர்சன் இருக்கிறதாம். அந்த இடத்திற்கேற்ப வரிகளை பயன்படுத்ததான் சுகன்யா அதற்கான பாடல்வரிகளை எழுத இருக்கிறாராம்.

ஒரு வேளை அந்தப் பாடல் ஹிட் ஆனால் தமிழில் பெண் கவிஞர் என்று சொல்லும் வகையில் தாமரை மட்டும்தான் இருக்கிறார். அதன் பின் சுகன்யா வருவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story