புதிய படத்தில் இப்படி ஒரு வேடம்!.. சந்தானத்துக்கு செட் ஆகுமா?....
காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக மாறியிருப்பவர் சந்தானம். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் மாறிவிட்டார். சந்தானம் என்றாலே லொட லொடவென பேசுவதுதான் அவர் ஸ்டைல். அதுதான் அவரின் பலமும் கூட. எதிரே உள்ள கதாபாத்திரம் ஒன்று கூறினால் அதற்கு கவுண்டர் கொடுப்பதில் கில்லாடி.
ஆனால், இதற்கு நேர் மாறாக அதிகம் பேசாத ஒரு திக்குவாய் கதாபாத்திரத்தில் அவர் ‘சபாபதி’என்கிற படத்தில் நடித்து வருகிறார். காமெடி மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஆர்.சீனிவாசராவ் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தை ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சி.ரமேஷ் குமார் தயாரித்துள்ளார்.
இதையும் படிங்க: கவினுக்கு அடித்த ஜாக்பாட்…. நயன்தாரா பட வாய்ப்பை தட்டி தூக்கிய கவின்
இப்படத்தில் திக்கு வாயால் அவதிப்படும் வாலிபராக சந்தானம் நடித்துள்ளார். தந்தை - மகன் இடையேயான உறவு இப்படத்தின் மையக்கருவாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ப்ரீத்தி வர்மா, குக் வித் கோமாளி புகழ் என பலரும் நடித்துள்ளனர்.