சந்தானமா கொக்கா? மவனே யார்கிட்ட.. ‘வடக்குபட்டி ராமசாமி’ பட விழாவில் வசமாக சிக்கிய கூல் சுரேஷ்

by Rohini |
santhanam
X

santhanam

Actor Santhanam: தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக கலக்கியவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் விஜய் டிவியில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடித்து வந்த சந்தானம் மக்கள் மத்தியில் அதன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு சிம்புவால் வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்யப்பட்டார். ஆரம்பத்தில் சிம்புவின் எல்லா படங்களிலும் சந்தானம் ஒரு நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

அதனை தொடர்ந்து அஜித், விஜய், ஆர்யா, உதயநிதி, விஷால், கார்த்தி ஆகியோர் படங்களில் மெயின் காமெடி நடிகராக மாறினார். இவர்களுக்குள் சந்தானம் மிக எளிதாக ஜெல் ஆனார். அதில் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஆர்யா மற்றும் கார்த்தியுடனான கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதையும் படிங்க: ஓரளவுக்கு தான் பொறுமை… இப்டியே எத்தனை நாளுக்கு உருட்டுவீங்க!… சிறகடிக்க ஆசை கொடுமை

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை எப்பொழுது பார்த்தாலும் போர் அடிக்காத படமாகத்தான் மக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். அதே போல் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவ மனசுல சக்தி போன்ற படங்கள் சந்தானத்தின் காமெடியை அதிகமாக தூக்கிக் கொடுத்த படங்களாகும்.

இதற்கிடையில் ஹீரோவாக அவதாரம் எடுத்த சந்தானத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரானார்கள். இந்த நிலையில் இன்று கார்த்திக் யோகிபாபு இயக்கத்தில் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்துகொண்டனர். கூடவே கூல் சுரேஷும் வந்திருந்தார். அவரும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். வழக்கம் போல கூல் சுரேஷ் இந்தப் படத்தையும் தன்னுடைய பாணியில் விளம்பரம் செய்தார்.

இதையும் படிங்க: இவரே ஒழுங்கில்ல… இன்னொரு நடிகருக்கு வாழ்வு கொடுக்கப்போறாரா?.. விஷாலை பொளந்து கட்டிய பிரபலம்

இதில் குறுக்கிட்டு பேசிய சந்தானம் கூல் சுரேஷை பார்த்து ‘பிக்பாஸ் போனதுக்கு பிறகு திருந்திட்டேனு சொன்ன. இப்போ கத்துற? இவன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் முதல்ல எனக்குத்தான் போன் பண்ணான். மச்சி சால்வை, மாலை போடனும், வரட்டுமா என்று கேட்டான். சரி வா-னு சொல்லிட்டேன்.

இங்கு வந்ததும் வாங்கிட்டு வந்த சால்வையையும் மாலையையும் என்னிடம் கொடுத்து அவனுக்கு போட சொல்லி அதை போட்டோவும் எடுத்துக்கிட்டு பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டான்’ என்று சொல்ல வந்திருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இதே போல்தான் டிஆருக்கும் போன் பண்ணி அங்கேயும் ஒரு மாலை சால்வை வாங்கிட்டு போய் அவரையும் போடச் சொல்லி டார்ச்சர் பண்ணியிருக்கான் என்று சந்தானம் கூல் சுரேஷை பங்கம் செய்தார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல மாமனாருக்கு அப்படியே தலைகீழ் மருமகன்!… இப்படி எல்லாமா தனுஷ் செய்வாரு?

Next Story