Connect with us
Rajni-dhanush

Cinema History

அந்த விஷயத்துல மாமனாருக்கு அப்படியே தலைகீழ் மருமகன்!… இப்படி எல்லாமா தனுஷ் செய்வாரு?

தமிழ்த்திரை உலகில் உள்ள நடிகர்களில் பலர் சூட்டிங்கிற்கு காலதாமதமாக வருகின்றனர். அந்தக் காலத்தில் சினிமாவில் கொஞ்ச காலம் பீல்டில் இருந்து அதன் பிறகு வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள் கிசுகிசுவிலாவது நமது செய்தியைப் போட மாட்டார்களா என ஏங்குவர்.

காலதாமதமாக வரும் நடிகர்களின் லிஸ்டை எழுத ஆரம்பித்தால் அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதனாலேயே பல நல்ல திறமை வாய்ந்த நடிகர்களும் காணாமல் போனார்கள். நவரச நாயகன் கார்த்திக்கையும் இப்படி தான் சொல்வார்கள். அவர் ரொம்ப திறமையான நடிகர். இருந்தும் இந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்காததால் தான் அவருக்கான மார்கெட் படிப்படியாக இறங்க ஆரம்பித்து விட்டது.

இதையும் படிங்க… நமக்கு சோறு போட்டவருக்கா இந்த நிலைமை?.. இயக்குனரின் நிலை கண்டு கண்கலங்கிய தயாரிப்பாளர்

கமல், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களும் சினிமாவுக்காக தன்னையே வருத்திக் கொள்வர். அதிகாலையிலேயே மணிக்கணக்காக மேக்கப் போட்டு சூட்டிங்கிற்கு தயாராகி விடுவர். இது குறித்து வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

சூட்டிங்ஸ்பாட்டுக்கு சரியான நேரத்தில் வராதவர்களில் முன்னணி நாயகர்களும் உண்டு. இவர்களைப் பொறுத்தவரை இந்தத் தயாரிப்பாளர் நம்மால் தான் சம்பாதித்து உயிர் வாழ்ந்து வருகிறார் என்று நினைக்கிறாங்க. அது இல்லேன்னா தொழிலை தொழிலாக நினைப்பாங்க. ரஜினி, கமல், விஜய் எல்லோரும் காலை 6 மணிக்கு சூட்டிங்னா மேக்கப்போட இருப்பாங்க. அதனால் தான் அவர்கள் எல்லாம் அந்த உயரத்தில் இருக்கிறார்கள்.

அதே நேரம் சரியான நேரத்தில் வராதவர்களுக்கு நாலு படம் பிளாப் ஆகும். ஒரு படம் ஹிட்டாகும். சூட்டிங் முடிந்தது என்று இயக்குனர் சொன்னால் தான் வீட்டுக்கே போவாராம் ரஜினி. அவரோட அவர் நினைத்தால் எப்போ வேணாலும் வீட்டுக்குப் போகலாம். ஆனாலும் அந்த இடத்தில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்.

இதையும் படிங்க… இது வேற வேறலெவல் வெறித்தனம்!.. வெளியானது கங்குவா பட புது போஸ்டர்!..

தனுஷும் சிறந்த நடிகர் தான். ஆனால் சூட்டிங்கிற்கு காலை 11 மணிக்குத் தான் போவார். இதே போல நிறைய நடிகர்கள் உண்டு. இது மாறினால் தான் தமிழ் சினிமா உலகம் முன்னேறும். இவர்கள் போன்றவர்கள் தான் தயாரிப்பாளர்களுக்கு மன உளைச்சலைத் தருகின்றனர்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top