நேத்து வரைக்கும் கோயில்ல உருண்ட நாட்டாமை! இன்னிக்கு எங்க இருக்காரு பாருங்க.. இதுவும் முக்கியம்ல

Actor Sarathkumar: தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றென்றும் ஒரு சுப்ரீம் ஸ்டார் ஆகவே இருந்து வருபவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த சரத்குமார் சூரியன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி அதன் பின் வந்த எல்லா படங்களிலும் ஒரு சூப்பர் ஹீரோவாகவே வலம் வந்தார்.

பொதுவாக குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான படங்களில் நடித்து ஒட்டுமொத்த குடும்பங்கள் கொண்டாடும் ஒரு நடிகராகவே மாறினார் சரத்குமார். அவர் நடித்த நாட்டாமை சூரிய வம்சம் போன்ற படங்கள் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகின்றது. ரஜினி கமல் இவர்களின் அப்போதைய படங்கள் ரி ரிலீஸ் செய்யும் பட்சத்தில் சரக்குமாரின் சூர்யவம்சம் நாட்டாமை போன்ற படங்களை ரி ரிலீஸ் செய்தால் அதுதான் இன்றைக்கும் நம்பர் ஒன் திரைப்படமாக திரையரங்குகளில் ஜொலித்துக் கொண்டிருக்கும்.

இதையும் படிங்க: இது கமலோட ஃபேவரைட் நடிகையாச்சே! ‘கூலி’ படத்தில் நாயகியாகும் பிரபலமான பேருள்ள நடிகை

அந்த அளவுக்கு அந்த இரு படங்களும் சரத்குமாரின் கெரியரிலேயே மிகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களாகும். அதே வகையில் அதிக அளவில் வசூலித்த படங்களாகவும் அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் நேற்று தேர்தல் ரிசல்ட் என்பதால் ராதிகாவுக்காக விருதுநகர் மாரியம்மன் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்து வந்தார் சரத்குமார்.

எப்படியாவது தன் மனைவியான ராதிகா இந்த தேர்தலில் ஜெயித்து எம்.பி ஆக வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் கோயில் முழுவதும் அங்க பிரதட்சணம் செய்து வேண்டினார். ஆனால் அவருடைய வேண்டுதல் பலனளிக்கவில்லை. இந்த தேர்தலில் ராதிகா தோல்வியுற்றார். இது ஒரு புறம் இருக்க இன்று வரலட்சுமி திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: OMG! ஏமிக்கு இவ்ளோ பெரிய பையனா? கூடவே காதலருடன் உல்லாசம் வேற.. மஜாதான்..வைரலாகும் புகைப்படம்

அதாவது வரலட்சுமியின் திருமணம் கூடிய சீக்கிரம் நடைபெற இருப்பதால் அதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றன . இதில் திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணிகளை குடும்பமாக சேர்ந்து ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒரு பக்கம் சரத்குமார் இன்னொரு பக்கம் ராதிகா இன்னொரு பக்கம் சரத்குமாரின் முன்னாள் மனைவி மற்றும் வரலட்சுமி அவரது தம்பி சகோதரிகள் என குடும்பமே உட்கார்ந்து அந்த திருமண அழைப்பிதழ்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/stories/varusarathkumar/3383653903680609838?utm_source=ig_story_item_share&igsh=MW9nenBuZm5pcmwzcA==

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it