விஜயகாந்தும் நானும் ஒன்னா? என் வளர்ச்சியை தடுத்ததே இதுதான்! புலம்பும் நடிகர்
தமிழ் சினிமாவில் கேப்டனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். அவர் சினிமாவில் நடிக்கா விட்டாலும் அவரின் புகழ் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கொண்டாடப்படும் ஒரே நடிகர் விஜயகாந்த்.
கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து புகழின் உச்சிக்கே சென்றவர். சண்டை, நடிப்பு,வசனம் என எல்லா துறைகளிலும் பின்னி பிடலெடுத்தவர் விஜயகாந்த். இடையில் அரசியல் என பிரவேசித்ததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.எனினும் அவரின் புகழ் பாடுவதை ரசிகர்களும் சரி பிரபலங்களும் சரி நிறுத்தவில்லை.
இதையும் படிங்க : என்னடா சொல்றீங்க?.. இளைய தளபதி பட்டமும் விஜயோடது இல்லையா?.. 90களில் கலக்கிய இளைய தளபதி இவர்தான்!..
இந்த நிலையில் விஜயகாந்த் போன்றே தோற்றம், நிறம், முகம் என அனைத்திலும் ஒத்த ஒரு நடிகர் 90களில் பிரவேசித்தார். அவர் தான் நடிகர் சரவணன். பார்ப்பதற்கு விஜயகாந்திற்கு ஏதோ தம்பி இருப்பது மாதிரியான பிம்பத்தை அனைவரிடமும் ஏற்படுத்தினார்.
சில சமயங்களில் விஜயகாந்த் பேசுவது மாதிரியே பேசும்முறை என அனைவரையும் கவர்ந்தார். ஆனால் இந்த எண்ணம் தான் என் வளர்ச்சியை தடுத்தது என சரவணன் கூறினார். வைதேகி வந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார் சரவணன்..
அதன் பின் கிட்டத்தட்ட 30 படங்களுக்கும் மேல் நடித்த சரவணன் ஒரு கட்டத்தில் முன்னனி நடிகராக வலம் வந்தாலும் விஜயகாந்தின் பாவனைகள் இருந்ததனால் அவரிடம் எதிர்பார்த்தத்தை சரவணனிடமும் எதிர்பார்க்க தொடங்கினர். அந்த எதிர்பார்ப்பு தான் என்னுடைய தோல்விக்கே காரணமாக அமைந்தது என்றும்
அவர் வேற நான் வேற, நான் நடிக்க வரும் போது விஜயகாந்த் ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகர். எப்படி அவர் மாதிரி நான் ஆக முடியும் என்று கூறி வருத்தப்பட்டார்.எனினும் சமீபகாலமாக ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தன் திறைமையை நிரூபித்து வருகிறார்.