அமீருக்கு ஆதரவாக களமிறங்கிய சசிகுமார்..! என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? சூர்யா தரப்பு இப்போவாது பேசுமா?

Published on: November 25, 2023
---Advertisement---

Ameer vs Gnanvelraja: தமிழ் சினிமாவில் இப்போதைய சூழலில் எக்கசக்கமான பிரச்னைகள் நிலவி கொண்டு இருக்கிறது. அதில் சமீப நாட்களாக பற்றி எரியும் முக்கிய பிரச்னை என்றால் அது அமீர் மற்றும் ஞானவேல் ராஜா குறித்தது தான். இதில் மேலும் வலுவாக சசிக்குமார் அமீருக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார்.

ஜப்பான் படத்துக்கு அமீரை கூப்பிடாமல் போக அங்கு எரிய தொடங்கியது இந்த பிரச்சனை. இதை தொடர்ந்து பருத்தி வீரன் படத்தில் தனக்கு 2 கோடி நஷ்டம் என அமீர் ஓபனாக பேசி இருந்தார். இந்த பேச்சு வைரலான நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டி கொடுத்து இருந்தார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் மொத்த வாழ்க்கையும் போச்சு… யாருக்கும் அருகதை இல்லை… தேவ் ஆனந்த் ஓபன் டாக்..!

அதில், பருத்திவீரனை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அமீர் இயக்கி கொடுக்க வேண்டும் அதுவும் 2.75 கோடிக்கு என்று தான் அக்ரீமெண்ட் போட்டு இருந்தோம். ஆனால் அவர் மேலும் 2 வருடம் டைம் எடுத்து செலவை 4.75 கோடியாக மாற்றி விட்டார். அவருக்கு நாங்கள் எதுவும் கொடுக்க வேண்டியது இல்லை என்பது போல ஞானவேல் ராஜா பேட்டி கொடுத்திருந்தார்.

இதற்கு அமீரோ தங்களுக்குள் பருத்திவீரன் படத்துக்கு எந்த ஒரு அக்ரீமெண்ட்டுமே இல்லை. என்னை முதுகில் குத்தினேன் திமிராக எழுந்து நிற்பேன். ஹீரோக்கள் பின்னால் ஒளிய மாட்டேன் எனவும் பேசி இருந்தார். தற்போது அமீருக்கு ஆதரவாக இயக்குனரும், நடிகருமான சசிகுமார் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு ட்வீட்டை போட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: பிக்பாஸில் இந்த வார எலிமினேஷன் இவங்க தானா..! மிஸ்ஸான புல்லி கேங்கின் மெயின் டிக்கெட்..!

 

மேலும், அண்ணன் இயக்குனர் சங்கத்தின் பொறுப்பில் இருந்த போது நிறைய பிரச்னைகளை தீர்த்து வைத்தவர். அவர் பிரச்னையை தீர்க்க அவருக்கு வல்லமை உண்டு. இப்போது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வார்த்தைகளை இயக்குனர்கள் சங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

 

மௌனமாக இருப்பது உண்மையை மறைப்பதற்கு சமம் எனவும் ட்வீட் செய்து இருக்கிறார். சசிகுமாரும் தற்போது இந்த பிரச்னையில் களமிறங்கி இருக்கும் நிலையில் சூர்யா அல்லது கார்த்தி தரப்பும் வாய் திறக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.