கமுக்கமா வாசிக்கும் சத்யராஜ்! கேஸ் இல்லாம வெளியில வரனும்.. கட்டப்பாவையே குலுக்கிய ‘கூலி’

by Rohini |
sathya
X

sathya

Actor Sathyaraj: இன்று கூலி படத்தில் சத்யராஜ் நடிப்பதாக ஒரு போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் மிகவும் லோக்கலாக சத்யராஜுக்கே இருக்கும் அந்த வில்லத்தனமான லுக்கில் அவர் கொடுத்திருக்கும் போஸ் பெரிய மாஸாகி வைரலாகி வருகின்றது. இதற்கு முன் ரஜினி நடித்த ஒரு சில படங்களில் சத்யராஜ் நடிக்க அழைத்தும் வர மறுத்த சத்யராஜ் இந்த கூலி திரைப்படத்தின் போது ரஜினியுடன் இணைந்து இருக்கிறார்.

இதற்கு முன் 1986 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் பாரத் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். அதில் ரஜினிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருப்பார். தன் அம்மாவை ஏமாற்றி கர்ப்பமாக்கியதற்காக அப்பாவாக சத்யராஜை பழிவாங்கும் நோக்கில் சத்யராஜை ஒரு வழி பண்ணி விடுவார் ரஜினி.

இதையும் படிங்க:பெரிய நடிகர்கள்.. பல கோடி பட்ஜெட்!.. வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்!.. எல்லாமே இந்த வருஷம் ரிலீஸ்!

இந்த நிலையில் கூலி படத்தில் மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படம் கண்டிப்பாக வேறொரு தளத்திற்கு கொண்டு போகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .இந்த நிலையில் இன்று ஒரு பட விழாவிற்கு சென்றிருந்த சத்யராஜிடம் கூலி படத்தை பற்றிய கேள்வி கேட்டபோது அதற்கு அசால்டாக பதில் கொடுத்திருக்கிறார் சத்யராஜ்.

அதாவது ரஜினியுடன் கூலி படத்தில் நான் இணைகிறேன். அதற்கான அறிவிப்பு இப்போதுதான் வெளியானது. மேற்கொண்ட கேள்விகளுக்கு என்னால் பதில் எதுவும் சொல்ல முடியாது. அது அங்கிருந்து அவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ளவும். அக்ரிமெண்டில் அப்படித்தான் இருக்கிறது. அதற்கு மேல் சொன்னால் பிறகு என் மேல் கேஸ் போட ப் போகிறார்கள் என மிகவும் கிண்டலாக பதில் கூறி நழுவினார்.

இதையும் படிங்க: சத்யராஜ் போட்ட கண்டிஷன்… அதிகாலையில் துப்பாக்கியுடன் நின்ற தயாரிப்பாளர்…

அது மட்டும் அல்லாமல் நரேந்திர மோடி பயோ பிக்கில் நடிக்கிறீர்களா என்ன கேட்டதற்கு மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் இந்த பயோபிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். இப்போதுள்ள பா ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்றவர்களும் மோடி பயோபிக்கை எடுத்தால் மிக நன்றாக இருக்கும் என சொல்லி குபீரென சிரித்துக்கொண்டார் சத்யராஜ்.

Next Story