பாட்டு சூப்பர் ஹிட்! ஆனா அந்த வரிகளில் உடன்பாடு இல்லாத சத்யராஜ்.. என்ன பாட்டு?

by Rohini |   ( Updated:2024-08-14 15:16:44  )
sathya
X

sathya

Sathyaraj: தமிழ் சினிமாவில் சத்யராஜை பொறுத்தவரைக்கும் எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கேரக்டராகவே மாறக் கூடியவர். சினிமாவில் நடிக்க வந்த போது ஆரம்பத்தில் எதிர்மறை கேரக்டரில்தான் நடித்தார். அவர் வில்லனாக நடித்த அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் அவர் பேசிய வசனங்கள் இன்றும் அவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத் தந்தது.

தகடு தகடு என்று சொன்னாலே சத்யராஜ், என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று சொன்னாலும் சத்யராஜ், என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிக்கீங்களே என்று சொன்னாலும் சத்யராஜ்தான். இப்படி எண்ணற்ற பஞ்ச் வசனங்கள் சத்யராஜை அடையாளப்படுத்துகிறது. கிட்டத்தட்ட 75 படங்களில் வில்லனாகவே நடித்திருக்கிறார் சத்யராஜ்.

இதையும் படிங்க: சோப்பு போடுற சீன்ல நடிக்கனுமா? விஜய் ஹீரோனு சொல்லியும் நடிக்க மறுத்த நடிகை

அவர் ஹீரோவாக நடித்த முதல் மூன்று படங்கள் அட்டர் ப்ளாப் என்று ஒரு பேட்டியில் சத்யராஜே கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் கடலோட கவிதைகள் படம் சத்யராஜுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. அதனால் என்னுடைய முதல் வெற்றி பட நாயகி ரேகா என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார் சத்யராஜ்.

சத்யராஜை பொறுத்தவரைக்கும் மூட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர். பெரியாரின் கருத்துக்களை பின்பற்றுபவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மனதில் பட்டதை உள்ளபடியே பேசுபவர். இந்த நிலையில் தனக்கு உடன்பாடே இல்லாத வரிகளில் அமைந்த பாடலில் ஆடி அந்த பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியதை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் சத்யராஜ்.

இதையும் படிங்க: வீடு மட்டும் ஒரு கோடி!… சம்பளமே இத்தனை லட்சமா?.. ஆல்யா மனசுக்கு காசு கொட்டுது போல!..

சத்யராஜ் மற்றும் சுகன்யா நடிப்பில் வெளியான ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே.. சேலை உடுத்த தயங்குறீயே’ பாடல்தான் அது. அந்த பாடலை பொறுத்தவரைக்கும் வைரமுத்து வரிகள். ஏ.ஆர். ரஹ்மான் இசை. பாடல் அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட பாடல். பெரிய ஹிட்.

sathi

sathi

ஆனால் அந்த பாடலில் உள்ள வரிகளுக்கு நேர் எதிரானவன் நான் என சத்யராஜ் கூறினார். ஒரு பெண்ணை இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் மடத்தனம். அப்படி சொன்னால் அந்த பெண் பதிலுக்கு நம்மையும் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது.

இதையும் படிங்க: மஜாவா இருக்குறியே பஞ்சு மிட்டாயா!.. வேறலெவலில் கிறங்கவைக்கும் கீர்த்தி சுரேஷ்!…

இருந்தாலும் படத்திற்காக இப்படியெல்லாம் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது என சத்யராஜ் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இப்போது வெப் சீரிஸிலும் நடித்து வரும் சத்யராஜ் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிகளிலும் இவர்தான் இப்பொழுது டாப் ஸ்டார்.

Next Story