செத்த பாம்பை கூட அடிக்க தைரியமில்லாதவரா அந்த பிரபலம்? யாரைக் குறி வைக்கிறார் சத்யராஜ்?

by ராம் சுதன் |   ( Updated:2024-06-11 07:33:14  )
Sathyaraj
X

Sathyaraj

நடிகர் சத்யராஜ் ரொம்ப காட்டமாகப் பேசியுள்ளார். இன்னைக்கு உள்ள நடிகர்களுக்கு தைரியமே கிடையாது. செத்த பாம்பைக் கூட அடிக்கற மாதிரி பண்றாங்க. இன்னொன்னு இவங்களோட செயல் ஆட்சியாளர்கள் தலையில கை வைக்கிற மாதிரி இருக்கணும். அப்படி தைரியமா இன்னைக்கு நடிகர்கள் இருக்காங்களான்னு கேட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் எனக்கும் மணி வண்ணனுக்கும் அந்த தைரியம் இருந்துச்சு. எனக்கு அப்படி ஏதாவது ஒரு பிரச்சனை வந்துச்சுன்னா விட்டுட்டு விவசாயம் கூட செஞசி பொழைச்சிக்குவேன்னு சொல்லி இருக்கிறார். இதுபற்றி பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய். இவரைக் குறி வைத்துத் தான் சத்யராஜ் இப்படி பேசியுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. ரஜினி உச்சத்தில் இருந்தாலும் அரசியலுக்கு வர்றேன் என்று போக்குக் காட்டிவிட்டார். ஆனால் விஜய் அரசியலில் இறங்கிவிட்டார். சினிமாவிலும் கவனம் செலுத்துகிறார். இரண்டு பக்கமும் ஜரூராக வேலை நடந்து வருகிறது.

Vijay

Vijay

அரசியல் அற்ற நடிகர்கள் நாடாளக்கூடாது. அவர்கள் அரசியலுக்கு வந்தால் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு கட்சி, ஒரு கொள்கை என்று இல்லாமல் எதுவானாலும் பரவாயில்லை என்று இடத்துக்கு ஏற்ற மாதிரி பேசும் நடிகர்கள் தான் ரொம்பவே ஆபத்தானவங்கன்னு சொல்வாங்க. தான் பிழைக்கணும் என்பதற்காக எந்த விதக் கொள்கையையும் ஏத்துக்க மாட்டாங்க. எதுக்கு இந்த மாதிரி இருக்காங்கன்னா 3 வகையில இருக்காங்க.

பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் வருமான வரி கட்டாமல் சொத்தை சுருட்டி வச்சிருப்பாங்க, ஒருவேளை வெளியே வந்துடுச்சுன்னா என்னாவதுன்னு இருப்பாங்க. அரசியல் பாலபாடம் கற்றுக்கொள்ளாத தன்மை, ஒரு வேளை வாய்ப்பு போயிடுச்சுன்னா என்னாகறதுன்னு யோசிக்கிறவங்க இப்படி 3 வகையா இருக்காங்க.

நடிகர்கள் நாடாளவில்லையா என்றால் எம்ஜிஆர், என்டிஆர் எல்லாம் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் அரசியலை நோக்கிப் பயணப்பட்டவர்கள். எம்ஜிஆர் போன்றவர்கள் திராவிட அரசியலைக் கற்றுக்கொண்டார்கள். அந்தக் காலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த நடிகர்கள் பலர் இருந்தனர்.

எம்ஜிஆர், சிவாஜி காலத்துக்குப் பிறகு ரஜினி, கமல் எந்த அரசியல் பக்கம் இருக்கிறேன் என்பதையே காட்டவில்லை. அவர்களில் கமல் கூட கொஞ்சம் பரவாயில்லை. இன்னைக்கு உள்ளவர்கள் நல்ல பேர் எடுக்க அன்னதானம், கொடை வள்ளல் என நோட்டுப் புத்தகங்கள், தையல் மிஷின் என கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். விஜய் கூட வருடத்திற்கு ஒரு முறை முதல் 3 இடம் பிடித்த மாணவர்களைக் கௌரவிக்கிறாங்க. இதைத் தான் விஜய் செய்கிறார்.

இதையும் படிங்க... விஜய் ஏன் ஒரு வார்த்தை கூட அதைப் பற்றிப் பேசல…? பிரபலம் கேட்பது நியாயம் தான்..! இப்பவாவது கவனிங்க தளபதி..!

இது என்ஜிஓக்கள் பண்ற வேலை. ஒரு நடிகன், படைப்பாளி எதிர்க்கட்சி தலைவன் மாதிரி இருக்கணும். அதனால் தான் என்எஸ்கே., எம்.ஆர்.ராதாவைக் கொண்டாடுறோம். விஜய்கிட்ட இதுவரை அரசியல் புரிதல் இருக்கா என்றால் தெரியவில்லை. எதையுமே சொல்லாம அரசியலுக்கு வந்து இருக்கிறார். பொதுவெளியில் எதுவுமே சொல்ல தயக்கம்னு கூட சொல்றாங்க. எம்ஜிஆருக்கு ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருந்தாங்க. அப்படி கூட ஆள்களை வச்சிக்கலாம்.

ஆனால் எதுவுமே சொல்லாம இருந்தா அவரை நம்பி இருக்கிறவங்களோட வாழ்க்கைத் தரம் பின்னோக்கிப் போயிடும். சத்யராஜ் அந்த வகையில விஜயை மட்டும் குறிவைக்கல. எல்லா உச்ச நடிகர்களையும் தான் சொல்லியிருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story