Cinema History
வீட்டை விட்டு ஓடி வந்த செந்தில்… யாராலனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க.. பாவம்தான் மனுஷன்!..
Comedy actor Senthil: தமிழ் சினிமாவில் அனைத்து திரைப்படங்களிலும் காமெடி என்பது கண்டிப்பாக இருக்கும். ஒரு படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் கதை முக்கியம் என்றாலும் மக்களை பெரும்பாலும் பொழுதுபோக்குவது காமெடிகளே. தமிழ் சினிமாவில் காமெடிகளுக்கு பஞ்சமே கிடையாது. அதனால் காமெடி நடிகர்களுக்கும் பஞ்சமே கிடையாது.
என்னதான் காமெடி நடிகர்கள் பலர் இருந்தாலும் ஒரு சிலரின் காமெடிகள் என்றும் மனதில் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட காமெடியன்களில் ஒருவர்தான் செந்தில். இவரை நாம் பல திரைப்படங்களில் கவுண்டமணியின் காமெடிகளில் பார்த்திருக்க முடியும்.
இதையும் வாசிங்க:மேஜர் சுந்தர்ராஜன் கேட்ட உதவி!.. ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட எம்ஜிஆர்.. பழச மறக்காத மக்கள் திலகம்
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் உள்ள காமெடிகள் அனைத்தும் இன்று வரை மக்களால் ரசிக்கப்படுகிறது. இவர் கவுண்டமணியிடம் அடி வாங்குவது போன்ற காமெடி காட்சிகள் பல திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தன.
இவை அனைத்தும் ரசிகர்களை கவரும்படியும் அவர்களை சிரிக்க வைக்கும்படியும் இருந்தன.கரகாட்டகாரன் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த வாழைப்பழ காமெடி இன்று பார்த்தால் கூட நம்மை சிரிக்க வைக்கும். சின்ன கவுண்டர், சின்ன ஜமீன் போன்ற பல திரைப்படங்களில் இவர்களின் காமெடிகளை பார்க்க முடியும்.
இதையும் வாசிங்க:கால்ஷீட் கொடுத்தவரையே கலாய்த்த மிஷ்கின்… வாய அடக்கி பேசுங்க டைரக்டர் சார்!..
இப்படிபட்ட அருமையான காட்சிகளை கொடுத்த செந்தில் தனது ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். இவரை இவரது தந்தைக்கு பிடிக்காதாம். இவரை பல முறை உதாசினப்படுத்தியுள்ளாராம். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த செந்தில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாராம்.
பின் எண்ணை ஆட்டும் கடையிலும், மதுபானக்கடையிலும் பணியாற்றியுள்ளார். பின் நாடகத்துறையில் இணைந்து தன்னுடைய திறமையை வளர்த்துள்ளார். பின் சினிமாவில் நுழைந்த இவர் மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தின் மூலம் இவர் தனது காமெடிகளை அனைவருக்கும் அறியச் செய்தார். பின் பாட்டி சொல்லை தட்டாதே, கரகாட்டகாரன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தார்.
இதையும் வாசிங்க:மது – மாது.. தடம்புரண்ட சுதாகரின் வாழ்க்கை!.. கனவு நாயகன் கோமாளி ஆன கதை!..