சும்மா பேசத்தான் இவங்க லாய்க்கு… வேலைல ஒண்ணும் இல்லை.! தமிழ்சினிமாவை பொளந்து கட்டிய பிரபலம்!

actor shaam
நடிகர் ஷாம் மென்மையான கதாநாயகனாக தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார். அவர் நடித்த லேசா லேசா படம் நெஞ்சைத் தொட்டது. இயற்கை படம் அவ்வளவு அற்புதமாக இருந்தது. அதில் அவரது யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை சுண்டி இழுத்தது. அதே போல 12 பி படம் அவரை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது.
சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போனார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2019ல் காவியன் என்ற படத்தில் வந்து கம்பேக் கொடுத்தார். ஆனால் படமோ எடுபடவில்லை. 2020ல் 'நாங்க ரொம்ப பிசி' என்ற படத்தில் வில்லனாக நடித்தார். அதுவும் எடுபடவிவ்லை.
2023ல் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்தார். அதில் விஜயின் அண்ணனாக வந்தார். அப்படி நடித்தும் பெரிய அளவில் அவருக்குக் கம்பேக் கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்சினிமா உலகை மனிதர் பொளந்து கட்டியிருக்கிறார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
கர்நாடகவுல இருந்து ஒரு கேஜிஎஃப், காந்தாரா வந்து பேன் இண்டியான்னு அடிச்சிட்டாங்க. தெலுங்குல இருந்து புஷ்பா இந்திய ரெக்கார்டையே உடைச்சிட்டாங்க. பாகுபலியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மலையாள சினிமாவுல பார்த்தா ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க. அங்கே கதைக்குத் தான் முக்கியம்.
தமிழ்சினிமாவுல பேச்சு தான் ஜாஸ்தியா இருக்கு. ஆனா கன்டன்ட் இல்லை. நான் டைரக்டரைத் தப்பா சொல்லலை. உலக சினிமா அப்படிங்குற அளவுக்கு பேச்சு அதிகமா இருக்கு. பார்த்தா ஒண்ணும் இல்லை. நம்ம கிட்ட தான் சூப்பர் ஸ்டார், தல, தளபதின்னு எல்லாரும் இருக்காங்க. நம்ம தமிழ் சினிமாவும், பேன் இண்டியா சினிமா ஆகணும். நம்ம ஆளுங்க டால்கிங்ல மட்டும் இருக்காங்க. அவங்க ஒன்லி ஆக்ஷன்ல இருக்காங்க என்று நடிகர் ஷாம் பேசி அதிரடி காட்டியுள்ளார்.